இப்படித்தான் இருக்கும் திமுக ஆட்சியும்… வீடியோவை பகிர்ந்து கிண்டலடிக்கும் பாஜக பிரமுகர் குஷ்பு..!!

Author: Babu Lakshmanan
5 April 2023, 2:06 pm

பேருந்து சேவையை தொடங்கி வைத்த திமுக எம்எல்ஏவின் செயலை வைத்து, திமுகவின் ஆட்சியை பாஜக பிரமுகர் குஷ்பு விமர்சித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்கதிப்பூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசிப்பவர்களின் வசதிக்காக, பேருந்து சேவையினை துவங்கி வைக்க காஞ்சிபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம். பி.எழிலரசன் வந்திருந்தார். அப்போது, எம்.பி. செல்வம் உட்பட்ட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என சுமார் 30க்கும் மேற்பட்டோரை அமர வைத்தபடி, பேருந்து ஓட்டுவது போல் போட்டோவிற்கு போஸ் கொடுக்க ஏறி அமர்ந்தார் எம்எல்ஏ எழிலரசன்.

திடீரென அவர் என்ன நினைத்தாரோ, பேருந்தை ஓட்ட முற்பட்டார். அப்போது அங்கு குறுகிய வழியில் சற்று தூரம் சென்ற பேருந்து பக்கவாட்டிலிருந்த கால்வாய் ஒன்றில் இறங்கி விபத்துக்குள்ளானது. அருகிலிருந்த மின்கம்பத்திலிருந்து செல்லக்கூடிய STAY ஒயரின் மீது பேருந்து சாய்ந்தபடி நின்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த கட்சியினர்,பொதுமக்கள் என அனைவரும் பேருந்திலிருந்து உடனடியாக வெளியேறி நிம்மதி பெருமூச்சி விட்டனர். பயணிகள் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினர். இதனையெடுத்து கட்சியினர் உதவியோடு எம்எல்ஏ வை மீட்டனர்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இந்த வீடியோவை பகிர்ந்த பாஜக பிரமுகர் குஷ்பு, பொதுமக்களை பேருந்தில் அமர வைத்து பள்ளத்தில் திமுக எம்எல்ஏ தள்ளியதைப் போன்று தான், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியும் இருப்பதாக கிண்டலாக விமர்சித்துள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!