இலவச வேட்டி திட்டத்தில் மெகா ஊழல் ; ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை ; அமைச்சர் ஆர். காந்தி மீது புகாரளிக்க பாஜக முடிவு

Author: Babu Lakshmanan
7 February 2024, 2:14 pm

பொங்கலுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட இலவச வேட்டியில் அமைச்சர் ஆர்.காந்தி ஊழல் செய்துள்ளதாக ஆதாரத்தை வெளியிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் நேற்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் எண் மண் என் மக்கள் நடைபயண நிகழ்ச்சி நடைபெற்றது. ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே தொடங்கி நடை பயணம் ஆனது முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் பேசிய அண்ணாமலை, தமிழக அமைச்சர் ஆர்.காந்தி கெட்ட வார்த்தை பேசுவதில் 35 அமைச்சர்களில் முதலிடத்தில் உள்ளார். சாராயம் காய்ச்சி குண்டர் சட்டத்தில் கைதானவர். அரக்கோணம் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் ராணிப்பேட்டையில் உள்ள குரோமிய கழிவுகள் மத்திய அரசின் நிதியில் முழுமையாக அகற்றப்படும், என வாக்குறுதி அளித்தார்.

நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை நாடாளுமன்றத்தில் அமைச்சர் எல்.முருகனை அன்பிட் என பேசிய திமுக எம்பி T.R.பாலுவிற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தார். மேலும், திமுக எம்பி T.R.பாலு பொது இடத்தில் அமைச்சர் எல்.முருகனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இது எல்முருகனுக்கு எதிரான கருத்து இல்லை என்றும், அவர் சார்ந்த சமுதாயத்திற்கு எதிரான கருத்தாகவே பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.

சமீபத்தில் பொங்கலை ஒட்டி இலவச வேட்டி வழங்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு தெரிவித்த அண்ணாமலை 100 சதவிகிதம் காட்டனில் செய்யப்பட வேண்டிய வேட்டியை 78% பாலிஸ்டர்யிலும் 22 சதவிகிதம் மட்டுமே காட்டனிலும் தயாரித்து அமைச்சர் ஆர். காந்தி ஊழலில் ஈடுபட்டுள்ளதாக ஆதாரத்தை வெளியிட்டார். இது தொடர்பாக இன்று லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி