மக்கள் மற்றும் விவசாயிகள் மீது பிரதமர் மோடிக்கு மட்டுமே அக்கறை… நலத்திட்டங்களை பட்டியலிட்டு அண்ணாமலை வாக்குசேகரிப்பு

Author: Babu Lakshmanan
29 March 2024, 4:33 pm

திருவள்ளூர் மாவட்டத்திற்கு மத்திய அரசின் நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தி உள்ளதாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை அடுத்த மாதவரம் அருகே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் தனி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் பொன் பால கணபதியை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் திரு அண்ணாமலை வாக்கு சேகரித்தார்.

அப்போது, பொதுமக்களிடையே பேசிய அண்ணாமலை, மத்தியில் ஆளும் பாரத பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்படுவதாகவும், எண்ணற்ற பல திட்டங்களை இன்னும் செயல்படுத்த இருப்பதாகவும் கூறினார். எனவே, மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சி அமைய தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும், அதே போல் கூட்டணி கட்சி சின்னங்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், திருவள்ளூர் மாவட்டத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கு மட்டும் 4 ஆயிரத்து 416 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி அம்ருத் பாரத் ரயில்வே திட்டம் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்கள், 28 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 71 ஆயிரத்து ஐந்நூறு 32 குடும்பங்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அதே வீடுதோறும் குடிநீர் இணைப்பு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 830 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. உஜ்வாலா இலவச எரிவாயு இணைப்பு திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 123 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் மருத்துவ காப்பீடு அட்டையை இதுவரை மாவட்டத்தில் 16 ஆயிரத்து 628 பேர் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

அதேபோல், விவசாயிகள் கௌரவநீதி இதுவரை திருவள்ளூர் மாவட்ட 72 ஆயிரத்து 850 விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி உள்ளது. முத்ரா கடனுதவி தமிழ்நாட்டுக்கு இரண்டு லட்சம் கோடி திருவள்ளூர் மாவட்டத்திற்கு மட்டும் 6ஆயிரத்து 278 கோடி முத்ரா கடன் உதவியாக வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசின் நலத்திட்டங்கள் மாவட்டத்திற்கு செயல்படுத்தி இருப்பதை பட்டியலிட்டார். அதனால், மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி மத்தியில் அமைய அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும், என்று அவர் வாக்கு சேகரித்தார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!