பிரமாண்டமாக தயாராகும் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை… வாஜ்பாய் திடலில் ஏற்பாடுகளை நேரில் ஆய்வு அண்ணாமலை…!!

Author: Babu Lakshmanan
28 July 2023, 4:02 pm

‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நடைபெறும் வாஜ்பாய் திடலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று மாலை ராமேஸ்வரத்தில் இருந்து துவங்க உள்ளார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு விழாவை துவக்கி வைக்க உள்ளார்.

இந்நிலையில், இன்று மாலை நடைபெறும் வாஜ்பாய் திடலில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆகியவுடன் இணைந்து முன்னேற்பாடு பணிகள் குறித்து தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!