எச்.வினோத்துக்கு அந்தப் பழக்கமே இல்லை… சில நேரங்களில் நமக்கு துணிவு தேவை : அண்ணாமலை சொன்ன சுவாரஸ்யம்!!

Author: Babu Lakshmanan
13 January 2023, 2:18 pm

இன்னும் 15 ஆண்டுகளில் இந்தியா- அமெரிக்கா இடையே பொருளாதார போட்டி நிலவும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சுவாமி விவேகானந்தரின் 161வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் கன்னியாகுமரியில் நடைபெற்றது. இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:- சுவாமி விவேகானந்தரின் 161வது பிறந்தநாள் விழாவில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வந்திருக்கும் அனைவரையும் வரவேற்கிறேன். நூறு இளைஞர்களை கொடுங்கள் என விவேகானந்தர் கேட்டார். ஆனால் இங்கு 1200 இளைஞர்கள் வந்திருக்கிறீர்கள். போதை கலாச்சாரத்தில் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம்.

எந்த கட்சியிலும் சாராத 1200 பேரை இங்கே அழைத்து வந்திருக்கிறோம். உடல், மனம், ஆன்மீக ரீதியாக தெளிவாக இருக்கும் 100 இளைஞர்களை விவேகானந்தர் கேட்டார். 1897ல் சொன்னார். இப்போது 125 ஆண்டுகளை தாண்டியிருக்கிறோம். விவேகானந்தரின் கனவு நனவாகியிருக்கிறதா என்ற கேள்வி இங்கு இருக்கிறது.

ஒரே நாளில் நம் மாற முடியாது. இந்த நிகழ்ச்சியின் மூலம் தீபத்திற்கு திரி ஏற்றுவதுபோன்று ஏற்றி வைத்திருக்கிறோம். நீங்கள் விவேகானந்தரின் கனவை மெய்ப்பிக்கும் விதமாக செயல்பட வேண்டும். சமூகம் சொல்லும் சில விஷயத்தை உடைக்க வேண்டும்.

1983 உலககோப்பை இந்தியா வென்றது. லக்கில் (அதிஷ்டத்தில்) வெற்றிபெற்றது என்று யார் நினைக்கிறீர்கள். உலககோப்பை வெல்வதாக கபில்தேவ் சொன்னபோது செய்தியாளர்களே சிரித்தார்கள். அப்போது கபில்தேவுக்கு 24 வயது. இந்த அணியால் ஜெயிக்க முடியும் என கஇல்தேவ் நினைத்தார். சிலநேரம் அந்த துணிவு நமக்கு தேவைப்படுகிறது.

இந்தியா பெரிய நாடு என்கிறீர்கள், ஆனால் இங்கிலாந்து எத்தனை நாட்டை கைப்பற்றி உலக சூப்பர் பவர் என்றார். எந்த நாட்டையும் நாங்கள் கைப்பற்றாததால் நாங்கள் சூப்பர் பவராக வரப்போகிறோம் என்றார் சுவாமி விவேகானந்தர். 5 மாதங்களுக்கு முன் பொருளாதாரத்தில் இங்கிலாந்து ஐந்தாவது இருந்தது.

இப்போது ஐந்தாவது இடத்துக்கு நாம் போனோம். இன்னும் 4, 5 ஆண்டுகளில் ஜப்பான், சீனாவை பின் தள்ளிவிட்டு 3வது இடத்துக்கு போய்விடுவோம். 15 ஆண்டுகளில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் போட்டி வந்துவிடும். 2047ல் உலகின் விஸ்வகுருவாக முதன்மையான நாடாக ஆக போகிறது. அப்போது விவேகானந்தர் கண்ட கனவு நனவாகும்.

2021-ம் ஆண்டில் இந்தியாவில் எவ்வளவு நேரம் வீடியோ பார்த்திருக்கிறோம் என்ற டேட்டா இருக்கிறது. 655 பில்லியன் மணி நேரம். ஒரு பில்லியன் 100 கோடி. செல்போனில் இந்தியர்கள் வீடியோ பார்த்திருக்கிறார்கள். உலகில் ஐந்தாவது அதிக வீடியோ பார்த்த நாடு நாம். பிரேசில், இந்தோனேசியா, தென் கொரியா, மெக்சிகோ ஆகியவை முதல் நான்கு இடத்தில் இருந்தது. வருடத்துக்கு 37 சதவீதம் இது அதிகரிக்கிறது.

போன மாதம் சராசரியாக ஒரு இந்தியன் ஒரு நாளுக்கு 21 மணி நேரம் வாட்ஸ் அப் பயன்படுத்தியுள்ளான். 70 கோடி இந்தியர்கள் இண்டர்நெட் பயன்படுத்துகிறார்கள். நாம் டெக்னாலஜிக்கு அடிமையாகிவிட்டோம். வாட்ஸ் அப்பில் மெசேஜ் வராமல் இருந்தாலும் ஓப்பன் பண்ணி பார்ப்பதில் தனி சுகம் இருக்கிறது. படம் பார்க்க வேண்டும் அது தவறு இல்லை.துணிவு, வாரிசு போன்ற படங்ககுக்கு டிரைலர் வந்து ஒரு மணி நேரத்தில் 5 மில்லியனுக்கு மேல் பார்த்துள்ளனர்.

2018-ல் 77 ஆயிரம் பேர் இன் ஜினியரிங் படித்துள்ளனர். 2019-ல் 75 ஆயிரம் பேர். 2022-ல் 68 ஆயிரம்பேர் இன் ஜினியர் படித்துள்ளார்கள். படிப்பதுகூட ஃபேஷனாக மாறிவிட்டது. நாம் துணிந்து இதயம் என்ன சொல்கிறதோ அதை கேட்டு அதை அடையும் துணிவு இல்லை. பாதி இன்ஜினியர் வேலை இல்லாமல் சுத்திகிட்டு இருக்கிறார்கள். நாம் படிக்கும் கல்வி உங்களுக்கு தேவையானதை படிக்காமல் யாரோ சொல்வதை படிக்காதீர்கள். கும்பகோணம் ரயில் நிலையத்தில் எழுந்திரு, விழித்திரு, இலக்கை அடையும்வரை நிற்காதீர்கள் என்றார்.

துணிந்து தைரியமாக அந்த வேலையை செய்ய வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன் ஒரு துணிவு இயக்குனர் வினோத் இண்டர்வியூ பார்த்தேன். இவர் எந்த படம் ரிலீஸ் ஆனாலும், அவர் படத்தை அவரே பார்க்கமாட்டார். அவர் வாட்ஸ் அப் வைக்கமாட்டார். ஒருபடம் முடித்தால் வேறு எண் வைத்துக்கொள்ள மாட்டார். தோற்றால் உலகமே உங்களை பார்த்து தூற்றும். நீங்கள் வாழும் வாழ்க்கை பிரஷர் மிகுந்த வாழ்க்கை. இந்த வயதில் இதை செய்யாமல் இருந்தால் வாழ்க்கை பெயிலியர் என சொல்கிறார்கள். எத்தனை பேருக்கு உங்கள் இலக்கை அடையும் துணிவு இருக்கிறது. போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள்.

எம்.ஆர்.காந்தி அரசியலில் 50 ஆண்டுகள். 75 வயதில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவர் பணியை செய்து கொண்டிருந்தார். மக்கள் தயாராகி ஓட்டுப்போட்டார்கள் எம்.எல்.ஏ ஆகிவிட்டார். அதேபோல, பொன் ராதாகிருஷ்ணனும் 9 தேர்தலில் போட்டியிட்டுள்ளார். 30 ஆண்டு அரசியல் பயணம். ஜெயித்து மந்திரியா இருந்தாலும், அவர்தான் காய்கறி வெடுவார் சமைத்து சாடு போடுவார். தோல்வியிலும் அதுபோலதான். வெற்றியிலும் தோல்வியிலும் அதே மனநிலை. பிரதமருடன் பக்கத்தில் இருக்கும் பண்பு. இப்போது அமைச்சராக இல்லாமல் இருந்தாலும் நம்முடன் சாதாரண இருக்கையில் அமர்ந்து இருக்கிறார்கள்.

1995ல் அணுகுண்டு வெடிக்க வேண்டும் எனது இந்தியாவின் ஆசை. அதற்கான வேலை நடந்தது. அமெரிக்கா சேட்டிலைட் படம் பிடித்தது. அதன் தூதர் பொருளாதார போர் நடத்தும் என்றதும் பி.வி. நரசிம்மராவ் அணுகுண்டை வெடிக்காமல் நிறுத்தினார்.

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அப்துல்கலாம் மூலம் அமெரிக்கா சேட்டிலை பறக்கும்போது மற்றொரு முறை வரும்போது அதற்கு இடைப்பட்ட நேரத்தில் பணி செய்ய சொன்னார். 3 அணுகுண்டை போட்டோம். நேருக்கு நேராக துணிந்து பேசவேண்டும். அது வெடித்த பிறகுதான் அமெரிக்காவுக்கே தெரிந்தது. வாஜ்பாயிடம் துணிவும், சமோஜிதமான புத்தியும் இருந்தது.

பிரதமர் மோடி 2016 நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு விஷயத்தை சொன்னார். அதன்பிறகு டிஜிட்டல் பணவர்த்தனையில் இந்தியா உலகில் முதல் நாடாக உள்ளது.
பண மதிப்பிழப்புக்கு பிறகு 74 பில்லியன் முறை இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்திருக்கிறோம். மாதம் 10 லட்சம் கோடி பணபரிவர்த்தனை செய்திருக்கிறோம்.

விவேகானந்தரை கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள். விவேகானந்தருக்கு குரு ராமகிருஷ்ணர் இருந்தது போன்று, நீங்களும் ஒரு குருவை கண்டுபிடியுங்கள். விவேகானந்தர் ராமகிருஷ்ணரை சோதனை செய்தார். அதுபோல, ராமகிருஷ்ணரும் விவேகானந்தரை பரீட்சித்தார். குரு யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். குரு இல்லாமல் வாழ்வது கடலை எதிர்த்து நீச்சலடிப்பது போன்றது.

குருவோடு வாழ்வது கடலுடன் சேர்ந்து நீச்சலடிப்பது போன்றது. விவேகானந்தருக்கும் ராமகிருஷ்ணருக்கும் 4 ஆண்டுகள்தான் தொடர்பு. உங்கள் வாழ்க்கை நேராக, முன்மாதிரியாக இருக்க வேண்டும், எனக் கூறினார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 762

    0

    0