பாஜகவின் ஆட்சி குறித்து ராகுலின் பாதயாத்திரை தெளிவுபடுத்தும் : பாஜக தலைவர் அண்ணாமலை

Author: Babu Lakshmanan
7 September 2022, 3:34 pm

70 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா சீரழிந்ததை எட்டு ஆண்டு கால மோடி ஆட்சியில் எப்படி வளர்ச்சி பெற்றது? என்பதை ராகுல் காந்தி தனது பாதயாத்திரையில் தெரிந்து கொள்வார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று வந்தார்.

பின்னர் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில் “70 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா சீரழிந்ததை எட்டு ஆண்டு கால மோடி ஆட்சியில் எப்படி வளர்ச்சி பெற்றது? என்பதை ராகுல் காந்தி தனது பாதயாத்திரையில் தெரிந்து கொள்வார். நீட் தேர்வு எந்த காலத்திலும் ரத்து செய்ய முடியாது. திமுகவினர் நடத்தும் மருத்துவ கல்லூரிகளுக்காக நீட் தேர்வை ஒருபோதும் ரத்து செய்ய முடியாது.

பல காலகட்டங்களில் அதிமுக பல்வேறு பிரிவுகளாக பிரிந்துள்ளது. தமிழகத்தில் அதிக முறை ஆட்சி செய்த கட்சி அதிமுக. அதனை குறைத்து மதிப்பிட கூடாது. சமூக ஊடகங்களை கண்காணிக்க காவல்துறை சார்பில் சமூக ஊடக குழுக்கள் அமைக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனால் அது நடுநிலையோடு நேர்மையாக செயல்பட வேண்டும்.

இந்திய அளவில் தமிழகத்தில் தான் குற்ற சம்பவங்கள் அதிகமாக நடப்பதாக தரவுகள் உள்ளது. முதல்வர் சட்ட ஒழுங்கு சரியாக உள்ளது என கூறுவதை ஏற்க முடியாது, இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சிகள் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி, மாவட்டத் தலைவர் தர்மராஜ் மாவட்ட பொருளாளர் முத்துராமன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்

  • Cool Suresh vs Vijay “WHAT BRO”நான் குல்லா போடுற ஆள் இல்லை..மேடையில் விஜயை தாக்கிய பிரபலம்.!