மாலை 6 மணி வரை கெடு..உள்ளே புகுந்து முடிச்சிடுவேன் : போராட்டத்தில் பாஜக பிரமுகர் சர்ச்சை பேச்சு!
Author: Udayachandran RadhaKrishnan26 March 2025, 3:54 pm
உண்ணாவிரத போராட்டத்தில் நம்பிக்கை இல்லை இன்று மாலை 6 மணி வரை நேரம் கொடுப்போம். நாளை உள்ளே புகுந்து முடித்து விடுவோம் என பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் சர்ச்சைக்குரிய வகையில் பேச்சு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வாவிபாளையம் பகுதியில் டயாப்பர் கம்பெனிக்கு கட்டிட அனுமதி வழங்கப்பட்டதை கண்டித்தும் ரத்து செய்ய கோரி 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் நிறுவனம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படியுங்க: தற்கொலை செய்ய துணிந்த மனோஜ்.. காப்பாற்றிய மனைவி : 8 வருடமாக பட்ட கஷ்டம்!
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் பேசுகையில் எங்களுக்கு உண்ணாவிரத காத்திருப்பு போராட்டத்தில் நம்பிக்கை இல்லை. இன்று மாலை 6 மணி வரை நேரம் கொடுப்போம்.

காலை உள்ளே புகுந்து முடித்து விடுவோம். எனக்கு எல்லா மாநிலங்களிலும் பல வழக்குகள் உள்ளது. இந்த பிரச்சனைக்கும் நான் முதல் ஆளாக வழக்கு பெற்றுக் கொள்கிறேன். எவ்வளவு பேர் வேண்டும் என சொல்லுங்கள் நாங்கள் உள்ளே சென்று பார்த்துக் கொள்கிறோம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.