முதலமைச்சர் குறித்து ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட பாஜக பிரமுகர் கைது: 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!

Author: Vignesh
6 November 2022, 1:29 pm

சென்னை: பாஜக பிரமுகர் ஒருவர் முதலமைச்சர் குறித்து ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை திருநின்றவூர் கொட்டம்மேடு பகுதியை சேர்ந்தவர் பூபதி(வயது32). இவர் பாஜக பிரமுகர் என்று கூறப்படுகின்றது. இவர் முதலமைச்சர் மற்றும் பட்டியலின சமூகத்தினர் குறித்து ஆபாசமாக பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டார்.

Chennai-updatenews360

இந்த வீடியோ வலைதளங்களில் வேகமாக பரவியது. இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், ஆவடியில் தலைமறைவாக இருந்த பூபதியை இன்று போலீசார் கைது செய்துள்ளனர். இவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Pushpa 2 Kissik song வசனமடா முக்கியம்…ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த புஷ்பா 2 “கிஸ்ஸிக்” பாடல் வீடியோ இதோ…!
  • Views: - 430

    0

    0