பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கல்வீசி தாக்குதல் : கோவையில் ஹெல்மெட் அணிந்தபடி வாக்கு சேகரித்த பா.ஜ.கவினர்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 February 2022, 5:58 pm

கோவை : கோவையில் பாஜக பிரச்சார கூட்டத்தில் மர்ம நபர் வீசி தாக்குதல் நடத்திய நிலையில் பாஜக வேட்பாளர் ஹெல்மெட் அணிந்தபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாநகராட்சி 76வது பாஜக சார்பில் போட்டியிடும் கார்த்திக் நேற்று இரவு 8 தனது ஆதரவாளர்களுடன் 76வது வார்டுக்குட்பட்ட செல்வபுரம் தெலுங்குபாளையம் புதூர், பாரதி ரோடு பகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது உடன் நிர்வாகிகள், தொண்டர்கள் சென்றனர். அவர்கள் தெலுங்குபாளையம் புதூர் ராஜீவ் நகர் தெருவில் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டிருந்தது.

அப்போது யாரோ மர்ம நபர் பிரசார கூட்டத்தில் கல்வீசி தாக்கியதில் செல்வபுரம் மண்டல பாஜக துணைத்தலைவர் முனீஸ்வரன் (வயது 52) என்பவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக செல்வபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட கார்த்திக் ஹெல்மெட் அணிந்தபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திமுக ஆட்சிக் காலத்தில் பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியபடி வாக்கு சேகரித்த கார்த்திக், பாஜகவுக்கு வாய்ப்பளிக்க கோரிக்கை வைத்தார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்