பாஜக மீது திமுக அமைச்சர் கையை ஓங்கியிருந்தால் பிரச்சனை வேறுமாதிரி ஆகியிருக்கும் : பாஜக பிரமுகர் சரவணன் எச்சரிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2022, 5:38 pm

நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் மீது செருப்பு எறியப்பட்ட சம்பவம் தொடர்பாக பாஜக கட்சி அலுவலகத்தில் பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மருத்துவர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

மாண்பற்ற அமைச்சர் பிடிஆர் பாஜகவுக்கு என்ன தகுதி உள்ளது இங்க வர்றிங்க என கேட்டார்.முதலில் அவருக்கு என்ன தகுதி உள்ளது. ஒன்றிய அரசு என சொல்லி பிரிவினைவாதத்தை தூண்டும் அமைச்சர் பிடிஆர்க்கு என்ன தகுதி உள்ளது.

உயிரிழந்த லெட்சுமணனுக்கு வைத்தியம் செய்துள்ளேன். அவர் குடும்பத்திற்கு என்னை தெரியும்.திமுக கட்சியை வைத்து வெற்றி பெற்றவர். தனியாக நின்று செல்வாக்கோடு வெற்றி பெற்றவர் இல்லை.

அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மத்திய தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடட்டும். நானும் போட்டியிடுகிறேன். யார் வெற்றி பெறுவார்கள் என பார்ப்போம்.அந்த அமைச்சருக்கு சவால் விடுகிறேன்.

இவங்கள எதுக்கு உள்ள விடுறிங்க என பொதுமக்களை பார்த்து அமைச்சர் பிடிஆர் கேட்டார்.இவர் பேச்சை கேட்டு திமுகவே கொதித்து போய் உள்ளது. தலைக்கனைம் பிடித்த அமைச்சர் பிடிஆர்.

நிதியமைச்சரை முதல்வர் பொறுப்பிலிருந்தே அகற்ற வேண்டும். பண்பாடு இல்லாத அமைச்சர் பிடிஆர். தரம் தாழ்ந்து அமைச்சர் பிடிஆர் இன்று நடந்து கொண்டார். நாங்கள் அந்த சம்பவத்தை செய்தோமா. அங்கே ஏராளமானோர் கூடியிருந்தனர்.

நீங்கள் சட்டரீதியாக எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். நாங்களும் சட்ட ரீதியாக அணுகுகிறோம். பிடிஆர் எங்கு சென்றாலும் பாஜக எதிர்ப்பை பதிவு செய்வோம். அறவழியில் போராடுவோம்.

நிதிஅமைச்சர் பாஜக மீது கையை ஓங்கி இருந்தால் வேறு மாதிரியாக இருந்திருக்கும். பாஜகவுக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு இருப்பதால் இப்படி நடந்து கொண்டுள்ளார். சண்டை மூட்டிவிடும் கட்சி பாஜக அல்ல. அதிமுகவை பார்த்து வெளியே போக சொல்லாதவர். பாஜகவை காழ்ப்புணர்ச்சியோடு வெளியே போக சொல்லி உள்ளார்.

  • Dragon Box Office Collection கதற..கதற..மின்னல் வேகத்தில் ‘டிராகன்’ வசூல்..!
  • Close menu