நிர்மலா சீதாராமனுக்கு ஒன்னும் தெரியாது.. பாஜக மூத்த தலைவர் பரபரப்பு பேட்டி

Author: Hariharasudhan
25 December 2024, 2:27 pm

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதுவும் தெரியாது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்து உள்ளார்.

சென்னை: இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி சேனலிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, “நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக இருக்கிறது. நாட்டின் பல பகுதிகளை சீனா ஆக்கிரமித்து வருகிறது. ஆனால், இதனைப் பற்றி யாரும் அவ்வளவாக பேசுவதில்லை.

இதற்கு காரணம், தலைமை சரியில்லை என்று நினைக்கிறேன். கட்சியின் தலைவர்கள் அதற்கான கட்டுப்பாடுகளை வைத்திருக்க வேண்டும். ஆனால், அவர்களை அதைச் செய்வதில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தற்போது வராது. எனவே, அதனைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.

ஜிஎஸ்டி வரியை அழிக்க வேண்டும். அதனை முட்டாள்தனமாக கொண்டு வந்து உள்ளனர். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதுவும் தெரியாது. அவர் துறை சார்ந்த அதிகாரிகள் மொத்தமாக எழுதிக் கொடுப்பர். அதனையே அவர் பேசுவார்” எனத் தெரிவித்து உள்ளார்.

Subramanian Swami about One nation one election

முன்னதாக, “நாடாளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேற்றப்பட்டால் நானே நீதிமன்றத்திற்குச் செல்வேன். ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் தேர்தல் செலவு குறையும் என்பதை நம்புபவர்கள் மக்கு. ரஷ்யா மற்றும் சீனாவில் ஒரே இடத்தில் இருந்து ஆட்சி அதிகாரம் செய்யலாம் என்பது சாத்தியமாக இருக்கலாம். ஆனால், இந்தியாவில் அது நடக்காது” என சுப்பிரமணியன் சுவாமி ஏற்கனவே கூறி இருந்தார்.

இதையும் படிங்க: நள்ளிரவில் சினிமாவை மிஞ்சிய சேசிங்… வனப்பகுதிக்குள் சிக்கிய கார்..!!

சமீபத்தில், நாடாளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதனை எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து, இதன் மீதான விவாதம் நடைபெறும். மேலும், சமீபத்தில் பாப்கார்னுக்கு 18 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரை உயர்த்தப்பட்டது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 53

    0

    0

    Leave a Reply