ஆட்களை வைத்து மிரட்டும் பாஜக பிரமுகர்.. விவசாயம் செய்ய முடியாமல் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற விவசாயி!

Author: Udayachandran RadhaKrishnan
16 February 2024, 1:53 pm

ஆட்களை வைத்து மிரட்டும் பாஜக பிரமுகர்.. விவசாயம் செய்ய முடியாமல் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற விவசாயி!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திருமதி.சரயு தலைமையில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பெருமாளபள்ளி கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் என்ற விவசாயி திடீரென மாவட்ட ஆட்சியரை நோக்கி வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது மாவட்ட ஆட்சியரிடம் அவர் கூறுகையில், தான் விவசாயம் செய்து வருவதாகவும், தான் விவசாயம் செய்து வரும் நிலத்தில் போர்வெல் அமைத்துள்ளதாகவும், அதற்கு மின் இணைப்பு தேவைப்பட்டது.

அதனால் மின் இணைப்பு அலுவலகத்தில் 3 லட்சம் ரூபாய் டெபாசிட் தொகை கட்டி இலவச மின்சாரம் வாங்கியுள்ளதாகவும், தற்போது அதற்கு லைன் போடுவதற்கு இரண்டு கம்பம் அமைக்க வேண்டும்.

கோவில் நிலத்தில் இரண்டு கம்பம் அமைக்க அரசு மூலம் அனுமதி பெற்றுள்ளதாகவும், கம்பம் அமைப்பதற்கு மின் இணைப்பு அலுவலகத்தில் அதிகாரிகள் மூலம் அனுமதியும் பெற்று அமைத்துள்ளதாகவும், ஆனால் கோவில் நிலத்தில் மின்கம்பம் வைக்கக்கூடாது என பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மோகன் என்பவர் தன்னுடன் 10 பேரை அழைத்து வந்து மின்கம்பங்களை கீழே தள்ளி அராஜகம் செய்து வருகிறார்.

பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் தற்போது குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தற்கொலை முயற்சி ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.

  • Director Rv Udayakumar Talked About Vijay Politics Entryஇது மட்டும் இல்லைனா விஜய் கட்சியே ஆரம்பித்திருக்க முடியாது : புயலை கிளப்பிய இயக்குநர்!