காதல் மனைவியுடன் புதுவீடு கட்டி குடியேறிய பாஜக பிரமுகர்.. வீட்டில் கிடந்த சடலங்கள் : நடுத்தெருவில் பிஞ்சுக்குழந்தைகள்!

Author: Udayachandran RadhaKrishnan
2 March 2024, 8:06 pm

காதல் மனைவியுடன் புதுவீடு கட்டி குடியேறிய பாஜக பிரமுகர்.. வீட்டில் கிடந்த சடலங்கள் : நடுத்தெருவில் பிஞ்சுக் குழந்தைகள்!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருணாசலம்புரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35) இவர் பாரதிய ஜனதா கட்சி மாநில இளைஞர் அணி பொறுப்பாளராக உள்ளார்.

மேலும் வத்தலகுண்டுவில் மொபைல் கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு, ஈரோட்டை சேர்ந்த சிவதர்ஷினி (29) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு சாய் சைலேஷன் (10) என்ற மகனும், சாய் சிரஞ்சி (4) என்ற மகளும் உள்ளனர். மணிகண்டன் வத்தலகுண்டு அருகே எம்.வாடிப்பட்டியில் சொந்தமாக வீடு கட்டி குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று தனது இரண்டு குழந்தைகளையும் கடையில் வேலை செய்யும் நபர் மூலம் மனைவி சிவதர்ஷினியின் சொந்த ஊரான ஈரோட்டிற்கு அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து பட்டப்பகலில் வீடு அதிக நேரம் திறக்கப்படுவதால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர்.

அப்போது, கணவன் மனைவி இருவரும், மின்விசிறி மாட்டும் இரும்பு கொக்கியில் சேலை மூலம் ஒரே நேரத்தில் பட்டப்பகலில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, தகவல் அறிந்த பட்டிவீரன்பட்டி காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தற்கொலை செய்து கொண்ட கணவன், மனைவி இருவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் கணவன் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 299

    0

    0