போதையில் புத்தி மாறிய பாஜக பிரமுகர் : தடுமாறினாலும் தள்ளாடியபடி சமூக சேவை!!

Author: Udayachandran RadhaKrishnan
2 August 2023, 4:46 pm

போதையில் புத்தி மாறிய பாஜக பிரமுகர் : தடுமாறினாலும் தள்ளாடியபடியே சமூக சேவை!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மீன்கரை சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும் புகழ் பெற்ற காந்தி வாரச்சந்தை. கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் குருவாயூர் போன்ற பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலை என்பதால் தினம்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

இந்நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள வசியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார். பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட நெசவாளர் அணி தலைவராக உள்ளார்.

காலையில் இருசக்கர வாகனத்தில் மது போதையில் பொள்ளாச்சி வந்து திரும்பி செல்லும் போது காந்தி வார சந்தை அருகே சாலையில் இருந்த பள்ளத்தில் தடுமாறி கீழே விழுந்துள்ளார்.அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அனுப்பி வைத்தனர்.

வீட்டுக்கு சென்றவருக்கு பள்ளத்தில் விழுந்து உருண்ட சம்பவம் நினைவுக்கு வந்ததால் அங்கு சென்றுள்ளார். தனக்கு ஏற்பட்ட நிலைமை இனி யாருக்கும் ஏற்படக்கூடாது என நினைத்து சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை தனது சொந்த செலவில் சிமெண்ட் மணல் வாங்கி வந்து தானே பூசி பள்ளத்தை சீர் செய்துள்ளார்.

கான்க்ரீட் கலவை உடனே காயாது என்பதால் தான் சிரமப்பட்டு பூசி மெழுகிய கான்கிரீட் கலவை மீது வாகனங்கள் ஏறினால் மீண்டும் பள்ளம் ஏற்பட்டு விடும் என்று எண்ணி போட்ட கான்கிரீட்டுக்கு சேதம் ஏற்படாமல் இருக்க மூன்று மணி நேரம் மது போதையில் தள்ளாடியபடி போக்குவரத்தை சீர் செய்தார்.

வரும் வாகனங்களை எல்லாம் கலவை மீது ஏறாமல் இருப்பதற்காக இருகரம் கூப்பி கும்பிட்டு வாகனங்களை வழி அனுப்பி வைத்தார். இருசக்கர வாகனத்தில் வந்தபோது பள்ளத்தில் விழுந்து எனக்கு காயம் ஏற்பட்டது இது போன்ற நிலை யாருக்கும் வரக்கூடாது என்பதால் இதை சீர் செய்ததாகவும் அதிகாரிகள் பழுதான சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஒருபுறம் நல்லது செய்து இருந்தாலும் மறுபுறம் மதுபோதையில் சாலையில் தள்ளாடிய பாஜக பிரமுகரின் இந்த செயலால் வாகன ஓட்டிகளும் முகம் சுளித்தனர்.

  • jana nayagan shooting finished in may mid and he possibly started political tour in may end முடியப்போகுது படப்பிடிப்பு, இனி அரசியலில் சுறுசுறுப்பு, சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விஜய்?