ராகுல் காந்தி கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் பாஜகவினர் திணறுகின்றனர் : செல்வப்பெருந்தகை பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
19 July 2024, 7:41 pm

இன்று காலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் முன்னாள் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத், மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இதனை தொடர்ந்து பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு இடத்தில் பரிணாம வளர்ச்சி ஏற்படுகிறது மோதிலால் நேரு, மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் காலத்தில் காங்கிரஸில் ஒரு பரிணாம வளர்ச்சி ஏற்பட்டது.

அதன் பின்னர் தற்போது ராகுல் காந்தியின் காலத்தில் காங்கிரஸ் ஒரு மிகப்பெரிய பரிணாம வளர்ச்சியை அடைந்திருக்கிறது. இன்றைக்கு பாஜக தலைவர்கள் அவரது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திக்கு முக்காடுகிறார்கள். அவர் சித்தாந்த ரீதியாக மக்களின் குரலாக தேசத்தின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறார்.

காங்கிரஸில் இளைஞர்கள் சாரை சாரையாக இணைந்து கொண்டிருக்கிறார்கள். நீதிபதிகள் காங்கிரஸில் சேர்கிறார்கள் ஆகவே நாம் மலைக்கோட்டையில் இருந்து செயின் ஜார்ஜ் கோட்டைக்கு செல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டால் அது சாத்தியமாகும் என கூறினார்.

இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ், வடக்கு மாவட்ட தலைவர் திருச்சி கலை, திருச்சி தெற்கு தலைவர் வக்கீல் கோவிந்தராஜன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!