காவல்துறை கடமையை செஞ்சிட்டாங்க.. எங்க போராட்டம் வெற்றி… விடுதலையான பின் குஷ்பு கருத்து!
Author: Udayachandran RadhaKrishnan3 January 2025, 7:40 pm
கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி குஷ்பு சுமார் 6 மணி நேரத்திற்கு பின்பு விடுவிக்கப்பட்டார்
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதிவேண்டி பாஜக மகளிரணி சார்பில் மதுரையில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பாஜக நிர்வாகி குஷ்பு கைது செய்யப்பட்டு மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள ஒர்க்ஷாப் சாலை ஆட்டு மகமை கட்டளை திருமண மண்டபத்தில் காலை 11.30 மணி அளவில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் 6 மணி நேரத்திற்கு பின்பு தற்போது விடுவிக்கப்பட்டு வெளியே வந்தார்.
இதையும் படியுங்க : விலகினாலும் விடாத விசிக.. ஆதவ் ப்ளானை கையிலெடுத்த திருமா?
மண்டபத்தில் அடைக்கப்பட்ட பாஜக நிர்வாகி குஷ்புவை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்களும் குஷ்புவின் ரசிகர்களும் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
விடுவிக்கபட்டு பிறகு குஷ்பு செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, மண்டபத்தில் அசௌகரியம் நிலவியதா என்ற கேள்விக்கு? காவல்துறையினர் அவர்களது கடமையை செய்துள்ளனர். போராட்டம் வெற்றிபெற்றுள்ளது. யார் அந்த சார் என்பது தெரியவேண்டும் என கூறினார்.