முன்னாள் மாவட்ட தலைவர் சரவணன் பாஜக பற்றி அவதூறு பரப்பினால் அவர் வீட்டை முற்றுகையிடுவோம் மதுரை மாநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஜாபர் ஷெரிப் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஜாபர் ஷெரிப் செய்தியாளர்களிடம் கூறியதாவது ;- முன்னாள் மாவட்ட தலைவர் சரவணன் அதிமுக, மதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு மாறி, தற்போது மீண்டும் திமுகவில் இணைய உள்ளார். இந்த நிலையில், அவர் பாரதிய ஜனதா கட்சியில் சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை அவர்கள் மதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
சிறுபான்மையிருக்கான முழு உரிமையும் அவர்களுக்கான பிரதிநிதித்துவமும் தமிழக பாஜக சிறப்பாக வழங்கி வருகிறது. குறிப்பாக, என்னை போன்ற முஸ்லிம்கள் பாஜகவின் கொள்கைகள் ஈர்க்கப்பட்டு தான் இணைந்துள்ளோம். பாஜக முஸ்லிம் மதத்தில் உள்ள குர்ஆன் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதைப் போலத்தான் சிறப்பாக செயல்படுகிறது.
இது போன்று அவதூறு செய்திகளை பரப்பும் சரவணன் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், சிறுபான்மை பிரிவு தொண்டர்கள் அனைவரும் சரவணன் வீட்டை முற்றுகையிட்டு விடுவோம்.
சிறுபான்மை பிரிவினருக்கு முத்தலாக் போன்ற சிறப்பான சட்டங்கள் மூலம் பாஜக முஸ்லிம் பெண்களை மதிக்கிறது. அது மட்டும் அல்ல, அது தலாக் போன்ற சட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் பெண்கள் இச்சட்டத்தை வரவேற்கின்றனர், என்றார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.