மக்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டது திமுக… CM ஸ்டாலின் கிட்ட நேரிடையாகவே சொல்லிட்டேன் ; பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்!!
Author: Babu Lakshmanan4 January 2024, 2:47 pm
திருநெல்வேலி மாவட்டத்தில் அனைவருக்கும் நிவாரணத் தொகை அறிவித்துவிட்டு ஒரு சில பகுதிக்கு மட்டும் வழங்குவது மக்களை நம்ப வைத்து ஏமாற்றும் செயல்.!!
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் இன்றி அகற்ற வேண்டும் – சட்டமன்ற கூட்டத்தொடரில் இது தொடர்பாக பேச உள்ளேன் – பாஜக எம்எல்ஏ நைனார் நாகேந்திரன் பேட்டி.!!
திருநெல்வேலி மாவட்டத்துக்கு உட்பட்ட மானூர் தாலுகாவில் பல கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்இ அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே நிவாரணத் தொகை வழங்கப்படுவதாகவும், அதனை வாங்க மறுத்து அரசு அறிவித்த ரூ.6000 நிவாரணம் வழங்க வேண்டும் என பெண்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க இன்று வந்தனர்.
அவருடன் சேர்ந்து திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் மனு அளித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் நைனா நாகேந்திரன் பேசியதாவது :- திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் நிவாரணம் முறையாக வழங்கப்படவில்லை. மானூர் தாலுகா பகுதியில் உள்ள கிராமங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ள நிவாரணம் 6000 ரூபாய் வழங்க வேண்டும்.
நேற்று முதலமைச்சரை சந்தித்தபோது வாய்மொழியாக 6000 வழங்க வேண்டும் என கூறினேன். எழுத்துப்பூர்வமாக முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளேன். அதிகாரிகள் வெள்ள பாதிப்பை முறையாக கணக்கிட்டார்களா..? இல்லையா..? என்பதை தாண்டி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரூ.6000 வழங்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியரை சந்தித்து பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் ரூ.6000 வழங்க ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மானூர் மக்கள் திமுக அரசு புறக்கணித்துள்ளது. மானூர் மக்களை நம்ப வைத்து ஏமாற்றம் செயல். நெல்லை மாநகராட்சி பகுதியில் 24 மணி நேரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு வந்துள்ள நிலையில், அது குறித்த கேள்விக்கு, பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இது குறித்து சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்னும் நான் பேச இருக்கிறேன், என தெரிவித்தார்.
0
0