திரைத்துறையில் அவர் பிடித்த இடம் என்பது யாராலும் நிரப்ப முடியாதது என்று விஜயகாந்த் மறைவுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திரைத்துறையிலும், அரசியலிலும் கேப்டன் விஜயகாந்த் பெரும் சகாப்தம். தேமுதிக தலைவர் அருமைச் சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், பெரும் துயரமும் அடைந்தேன். நீண்ட காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவரது மறைவு தாங்க முடியாத மன வேதனையைத் தருகிறது.
தமிழ்நாட்டின் கலாசார தலைநகரான மதுரையில் பிறந்து, திரைத்துறையில் போராடி பெரும் சாதனை படைத்தவர். திரைத்துறையில் அவர் பிடித்த இடம் என்பது யாராலும் நிரப்ப முடியாதது.
தேமுதிக என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி 2006-ல் போட்டியிட்ட முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே 8 சதவீத வாக்குகளைப் பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். 2006 உள்ளாட்சித் தேர்தல், 2009 மக்களவைத் தேர்தலில் தேமுதிக 10 சதவீத வாக்குகளைத் தாண்டியது. அதன் பிறகு 2016 சட்டமன்றத் தேர்தல் வரை தேமுதிகவுடன் கூட்டணி வைக்க பிரதான கட்சிகள் போட்டி போடும் நிலை ஏற்பட்டது.
உடல்நலப் பாதிப்பு காரணமாக அரசியலில் அவர் எட்ட வேண்டிய உயரத்தை எட்ட முடியவில்லை. தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டிருந்தாலும் திரைத் துறையிலும், அரசியலிலும் அவர் ஒரு பெரும் சகாப்தம் என்பதில் சந்தேகம் இல்லை. திரு. விஜயகாந்த் அவர்கள் மறைவால் வாடும் அவரது மனைவி தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா, மகன்கள், தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
This website uses cookies.