முதலமைச்சரின் அறிவிப்பு… பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் டபுள் ஹேப்பி!

Author: Udayachandran RadhaKrishnan
6 November 2024, 12:53 pm

கோவையில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானிதி சீனிவாசன், நிகழ்ச்சிக்குப் பின்னர் முதல்வரை சந்தித்து மனு வழங்கினார்.

மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் வானதி சீனிவாசனுடன் சிறிது நேரம் கோரிக்கைகளை நேரடியாக கேட்டுவிட்டு சென்றார்.இதன் பின்னர் கோவை தெற்கு தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசியவர், நிறைய அறிவிப்புகளை முதல்வர் கொடுத்து இருக்கின்றார் எனவும்,சின்னியம்பாளைம் முதல் நீலாம்பூர் வரை பாலத்தை நீடிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் நான் ஏற்கனவே பேசி இருக்கிறேன். அது தொடர்பான அறிவிப்பை முதல்வர் கொடுத்து இருக்கிறார் எனவும், தங்க நகை பூங்கா என்ற கோரிக்கையும் சட்டமன்றத்தில் பேசியிருக்கிறேன்.

அது தொடர்பான அறிவிப்பும் இங்கே கொடுத்திருக்கிறார் என தெரிவித்தார்.முதல்வரிடம் விஸ்வகர்மா யோஜானா திட்டத்தை தமிழகத்தில் செயல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை வைத்து இருக்கின்றேன் எனவும், கோவையில் பாதாள சாக்கடை, குப்பை இல்லாத கோவை, ஸ்மார்சிட்டி குளங்கள் பராமரிப்பு ஆகியவை குறித்தும் மனுவில் தெரிவித்து இருக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

மெட்ரோ ரயில் திட்டம் குறித்த கோரிக்கை முதல் கோரிக்கையாக மனுவில் இருக்கின்றது என தெரிவித்த அவர், மெட்ரோ ரயில் திட்டம் குறித்து பல்வேறு ஆவணம் மாநில அரசு சார்பில் மத்திய அரசிடம் கொடுக்காமல் இருக்கின்றது, அதை அவரது கவனத்திற்கு கொண்டு சென்று இருக்கின்றேன் என தெரிவித்தார்.

கோவை விமான நிலைய விரவாக்கத்திற்கு நிலம் ஒப்படைத்து விட்டதாக சொன்னார், ஆனால் ஒரு சிலர் இன்னும் அங்கு இருப்பது குறித்து அவரிடம் தெரிவிக்கப்பட்டது, உடனடயாக அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க சொல்லி இருக்கின்றார் எனவும் தெரிவித்த வானதி சீனிவாசன், அதனால்தான் 95 சதவீத பணிகள் மட்டும் விமான நிலைய விவகாரத்தில் முடிந்து இருக்கின்றது என முதல்வர் சொல்லி இருக்கின்றார் என குறிப்பிட்டார்.

கோவையில் சாலை பணிகளுக்காக கூடுதாக 200 கோடி ஒதுக்கீடு செய்து இருக்கின்றனர்.இந்த 200 கோடியாவது தரமான முறையில் சாலைகள் அமைக்க செலவிட பட வேண்டும் என தெரிவித்த அவர், கோவை தெற்கு தொகுதியில் பல இடங்களில் பட்டா கிடைக்காமல் இருக்கின்றனர். கோவை வளர்ச்சிக்கு இன்னும் அதிகமான திட்டங்கள் தேவை எனவும் தெரிவித்தார்.

இதையும் படியுங்க: ஆபாசமாக திட்டிய தவெக நிர்வாகி.. தீர்க்கவில்லையா மாநாட்டு பாக்கி? பரபரப்பு புகார்

தெற்கால்தான் தற்பொழுது வடக்கு வாழ்கிறது என முதல்வர் பேசியிருப்பது குறித்த கேள்விக்கு, ஒரு குடும்பத்தில் வளர்ச்சி என்பதுதான் முக்கியம், முதல்வர் பிரிவினை வாதம் பேசாமல், மக்களை திசை திருப்பாமல் ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கோவையில் தலைமைச் செயலாளர், அமைச்சர்கள் ஆகியோர் முகாமிட்டுப் பணிகளை மேற்கொண்டு இருப்பதை மக்கள் பிரதிநிதி என்ற முறையில் வரவேற்கின்றேன், இது போல அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு பணிகளை தீவிரபடுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அரசு துறையில் லஞ்சம் அதிகமாக இருக்கின்றது என தெரிவித்த அவர், கோவையை கவர முதல்வர் முயற்சி செய்கின்றார், கோவையை கவர்ந்து விட்டாரா என்பது 2026 தேர்தலில் தான் தெரியும் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!