பாஜக எம்எல்ஏ அலுவலகத்தில் புகுந்தவர் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ; வெளியானது அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

Author: Babu Lakshmanan
13 June 2023, 8:08 pm

கோவை ; கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் புகுந்த நபர் உயிரிழந்த விவகாரத்தில் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஓசூர் ரோட்டில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று மாலை அலுவலக உதவியாளர் விஜய் என்பவர் பணியில் இருந்தார். அப்போது அலுவலகத்துக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அரையின் கதவை உட்பக்கமாக பூட்ட முயற்சி செய்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அலுவலக உதவியாளர் விஜய் எழுந்து வந்து அந்த மர்ம நபரை வெளியே செல்லுமாறு கீழே தள்ளிவிட்டார்.

இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த மர்ம நபர் அங்கிருந்து சென்று விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக விஜய் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பிறகு ரேஸ்கோர்ஸ் போலீசார் சி.எஸ். ஆர். பதிவு செய்தனர். மேலும் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி அந்த மர்ம நபர் யார் என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் நடைபெற்ற கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்தில் பாஜக அலுவலகத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அவிநாசி ரோட்டில் மர்ம நபர் ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலியானார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

https://player.vimeo.com/video/835820583?badge=0&autopause=0&player_id=0&app_id=58479

இந்த நிலையில், கோவையில் பாஜக எம்.எல்.ஏ அலுவலகத்தில் புகுந்த அடையாளம் தெரியாத இளைஞர் பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அண்ணாசிலை அருகே அரசு பேருந்தில் தற்கொலைக்கு முயன்ற சிசிடிவி காட்சியை மாநகர போலீசார் வெளியிட்டனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 431

    0

    0