பெண்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்… பிரதமர் மோடியின் செயலை பாராட்டிய எம்எல்ஏ வானதி சீனிவாசன்!!
Author: Babu Lakshmanan27 September 2023, 6:11 pm
33 சதவீதம் இட ஒதுக்கீடு பெண்களுக்கு கிடைக்கும் போது இன்னும் அதிகமான உரிமைகள் கிடைக்கும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் ராமநாதபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு நடைபெற்றது. இதில் கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
300க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் இந்த சமுதாய வளைகாப்பில் பங்கேற்றனர். கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்து, சந்தனம் பூசி சடங்குகள் செய்தனர். சேலை, வளையல், தாலி கயிறு, குங்குமம், மஞ்சள் அடங்கிய சீர் வரிசை தட்டை ஆட்சியர் வழங்கினார்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த தேசிய மகளிர் அணி தலைவர் மாணவி சீனிவாசன் கூறியதாவது:- ஆரோக்யமான அம்மா என்னும் திட்டம் செப்டம்பரில் நடக்கும். இன்று கோவையில் நடக்கிறது. பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்காமல் இது போன்ற நிகழ்ச்சிகள் காக்கின்றன. தமிழ் நாட்டில் மாத்ரு வஞ்சன யோஜனாவுடன் முத்துலட்சுமி திட்டம் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
நிதி உதவிகள் கடந்த சில மாதங்களாக முறையாக கிடைப்பதில்லை என்ற சிக்கலை அமைச்சர்களிடம் கூறி உள்ளேன். அங்கன்வாடி மையங்களுக்கு என் தொகுதி நிதியை அதிகம் கொடுக்கிறேன். குழந்தைகளுக்கு, பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன்.
தேசிய ஐனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் எங்களது தலைவர்கள் பேசி வருகின்றனர். மோடி பிரதமராக வேண்டும் என்பதில் மற்ற கட்சிகளிடம் எந்த கருத்து வேறுபாடு இல்லை. கூட்டணிக்குள் அதிகமான கட்சிகளை கொண்டு வருவது, புதிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது ஆகியவை தேசிய தலைமை வழிகாட்டுதல் படி நடக்கும், என தெரிவித்தார்.