பெண் ஓட்டுநராக இருக்கும் பேருந்தில் பயணிப்பது பெருமிதமாக உள்ளதாக கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளா அனைவரது வாழ்த்துக்களையும் பெற்று வருகிறார். 23 வயதான ஷர்மிளா பயணிகள் பேருந்தை திறம்பட ஒட்டி அசத்தி வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்நிலையில் ஷர்மிளா இயக்கும் பேருந்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பயணம் மேற்கொண்டார். பேருந்தில் பயணித்த வானதி சீனிவாசன் ஷர்மிளாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து சிறிது நேரம் கலந்துரையாடினார்.
இது குறித்து பேட்டியளித்த பாஜக மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என்ற செய்தி வந்ததிலிருந்தே அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என எண்ணி இருந்த நிலையில், இன்று நேரம் கிடைத்தவுடன் அதே பேருந்தில் பயணித்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதாகவும், பேருந்தில் பயணம் செய்து நீண்ட காலம் ஆன நிலையில், தற்போது மீண்டும் பேருந்தில் செல்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
அதே சமயம் பெண் பேருந்து ஓட்டுநராக இருக்கும் பேருந்தில் பயணிப்பது மகளிர் அணி தலைவியாக பெருமிதமாக உள்ளது என்றார். மேலும், பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும் என்பதை கூற வேண்டும் என்பதுதான் தனது நோக்கமாக உள்ளது என தெரிவித்தார்.
பின்னர் இது குறித்து பேசிய பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேருந்தில் வந்திருந்தது மிகுந்த ஆச்சரியம் அளித்ததாகவும், தன்னுடன் சிறிது நேரம் கலந்துரையாடி தனக்கு வாழ்த்துக்களை தெரிவித்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாகவும் தெரிவித்தார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.