இளைஞரணி மாநாட்டிற்காக திமுக வைத்த போஸ்டர்.. உதயநிதி முகத்தை மறைத்து போஸ்டர் ஒட்டிய பாஜகவினர் : பரபரப்பு புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 January 2024, 8:22 pm

இளைஞரணி மாநாட்டிற்காக திமுக வைத்த போஸ்டர்.. உதயநிதி முகத்தை மறைத்து போஸ்டர் ஒட்டிய பாஜகவினர் : பரபரப்பு புகார்!!

நெல்லை மாநகர வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சுரேஷ்குமார், இளைஞரணி துணை அமைப்பாளர் இனியன் என்ற செந்தில்முருகன் ஆகியோர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் மீது புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் சேலத்தில் நடைபெறும் இளைஞர் அணி மாநாட்டிற்காக பாளையங்கோட்டை சமாதானபுரம் தூத்துக்குடி பேருந்து நிலையம் எதிரே தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் புகைப்படங்கள் அடங்கிய விளம்பர பதாகை இளைஞரணி சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விளம்பர போர்டில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, மாநில பொறுப்பாளர் பொன்பாலகணபதி, மாவட்ட பொறுப்பாளர் நீலமணியாதவ், மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோர் தூண்டுதலின் பேரில் நெல்லை தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் பிச்சையா என்ற நபர் வேண்டும் என்றே திட்டமிட்டு கலவரத்தை தூண்டும் நோக்கில் போஸ்டரை ஒட்டியுள்ளார்.

எனவே பிச்சையா உள்ளிட்ட மேற்படி எதிரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.இந்த மாநகர வழக்கறிஞர் அணி தலைவர் ஜாகீர்உஷேன், மத்திய மாவட்ட துணை அமைப்பாளர் மாலதி கண்ணன் உள்பட கலந்து கொண்டனர்.

  • Anirudh updates on Vidamuyarchiஅனிருத் வெளியிட்ட “விடாமுயற்சி” மாஸ் அப்டேட்…அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
  • Views: - 509

    0

    0