இந்திய இறையாண்மைக்கு எதிராக பேச்சு… பாதிரியாரை கைது செய்ய வலியுறுத்தி காவல் ஆணையரிடம் பாஜகவினர் மனு..!!

Author: Babu Lakshmanan
1 July 2022, 6:19 pm

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய பாதிரியார் ஜெகத் கஸ்பராஜை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினர் காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மற்றும் சென்னையில் நடைபெற்ற வெறுப்பு பிரச்சாரத்தை வேறொருப்போம் என்ற கூட்டத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் ஆதி குடிகள் 40% இருக்கின்றீர்கள். எனவே 40% நிலத்தை கேட்டுப்பெருங்கள் என்று சர்ச்சைக்குரிய கருத்தை பேசியிருந்தார்.

இந்த சர்ச்சைக்குரிய கருத்தை பேசிய ஜெகத் கஸ்பர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவினர் சார்பில் மாநில துணைத் தலைவர் பாட்ஷா திருச்சி மாநகர ஆணையர் கார்த்திகேயிடம் புகார் மனு அளித்தார்.

தொடர்ந்து செய்தியாளுக்கு பேட்டி அளித்த அவர் பேசியதாவது :- கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதிரியார் ஜெகத்கஸ்பர் ராஜ் இந்தியா இறையாண்மைக்கு எதிராகவும் ஆதி பழங்குடியினர், மற்றும் இஸ்லாமியர்கள் 40 சதவீதம் உள்ளதால் தனிநாடு கேட்க வேண்டும் என ஒரு பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் வகையில் தெரிவித்துள்ளார். எனவே, உடனடியாக காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் தமிழக அளவில் பெரிய போராட்டம் நடத்தப்படும், என தெரிவித்தார்.

  • AR Murugadoss about SIkandar movie remake of Thalapathy's Sarkar விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!