கருப்பு சிவப்பு நரிகள்… பாஜக போஸ்டர் : கோவையில் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
1 January 2025, 1:31 pm

சென்னை அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் மீது எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு எதிர்கடசிகள் கண்டன ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இவ்விவகாரத்தை குறிப்பிட்டு சாட்டையால் தன்னை தானே அடித்து கொண்டார்.

இதையும் படியுங்க: ‘ பெரிய பையனா இருந்தா வரமாட்டியா?’.. நடுரோட்டில் பெண் கொடூரமாக குத்திக் கொலை!

இந்நிலையில் கோவை மாநகரில் “பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் துணை நிற்பதே பாஜகவின் பழக்கம்.கருப்பு சிவப்பு நரிகளிடமிருந்து பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதை எங்கள் முழக்கம்!” என்ற வாசகங்களுடன் காந்திபுரம் பாலசுந்தரம் சாலை உள்ளிட்ட இடங்களில் பாஜக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

BJP Poster Viral In Coimbatore

இதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் புகைப்படம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.

  • Allu Arjun Pushpa2 box office collection புத்தாண்டில் புது மைல்கல்…அதிர வைக்கும் அல்லு அர்ஜுன் புஷ்பா2 வசூல்..!
  • Views: - 111

    0

    0

    Leave a Reply