இது மக்கள் விரோத ஆட்சி… சொத்துவரி, பால் விலை உயர்வுக்கு கண்டனம்… தமிழகம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்…!!
Author: Babu Lakshmanan15 November 2022, 2:15 pm
திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், பால் விலை, சொத்து வரி உள்ளிட்டவற்றின் விலை உயர்வை கண்டித்தும் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு பால் விலை, மின்சார கட்டணம் உயர்வு , சொத்து வரி உயர்த்திய திமுக ஸ்டாலின் அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று திண்டுக்கல் தெற்கு ஒன்றியம் சார்பாக திண்டுக்கல் பொன்னகரம் மின்சார வாரிய அலுவலகம் முன்பாக, திண்டுக்கல் தெற்கு ஒன்றிய தலைவர் முத்துவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கலந்து கொண்டனர்.
அப்போது, தமிழக அரசுக்கு எதிராகவும், தொடர்ந்து தமிழக அரசு பொதுமக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல், தொடர்ந்து பால்விலை, மின்கட்டண உயர்வு, சொத்து வரியை உயர்த்தி,மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருவதாக குற்றம் சாட்டினர்.
மேலும், தமிழக அரசு கொண்டுவந்த அனைத்து கட்டண உயர்வையும் உடனடியாக திரும்பக் பெற வேண்டும் என ஆர்ப்பாட்டமும் நடத்தி கோஷங்கள் எழுப்பினர்.