மக்கள் தலையில் சுமையை ஏற்றும் சொத்து வரி உயர்வு: பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
Author: Rajesh4 April 2022, 10:29 pm
வேலூர்: சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர் குலைவை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம்
வேலூர் மாவட்டம் அண்ணா கலையரங்கம் அருகில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாவட்டத்தலைவர் தசரதன் தலைமையில் கண்டன ஆர்பாட்டமானது நடைபெற்றது.
இதில் நிர்வாகிகள் பாபு,பிச்சாண்டி இளங்கோ,சரவணன்,ஜெகன் உள்ளிட்ட திரளான பாஜகவினர் கலந்துகொண்டனர். தமிழகத்தில் தமிழக அரசு சமீபத்தில் சொத்து வரியை கடுமையாக உயர்த்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கபடுகின்றனர்.
அத்துடன் கொரோனா காலத்தில் வருவாய் இன்றி மக்கள் இரண்டு ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பொய்யான காரணத்தை கூறி வரி உயர்வை செய்துள்ளனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உட்பட அனைத்து தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே வரி உயர்வை கண்டித்தும் உடனடியாக சொத்து வரி உயர்வை தமிழக அரசு திரும்ப பெற கோரியும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர் குலைந்துள்ளது. கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை, பாலியல் பலாத்காரங்கள், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல சமூக விரோத செயல்கள் நடக்கிறது.
இதனால் கொலைகளும் கொள்ளைகள் நடக்கிறது. எனவே சட்டம் ஒழுங்கு சீர் குலைவை கண்டித்தும் மேலும் வேலூர் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர கோரியும் ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.