முடிந்தது கெடு… அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிராக தயாரான பாஜக : அனுமதி கிடைக்குமா?!

Author: Udayachandran RadhaKrishnan
10 September 2023, 12:52 pm

சென்னையில் அண்மையில் தமுஎகச சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்பதே முதல் காரியம் என்றார்.

இது நாடு முழுவதும் பாஜகவினர், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பெரும் விவாதப்பொருளானது. இந்தக் கூட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டதற்கு பாஜக கண்டனம் தெரிவித்தது.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் தார்மிக உரிமையை சேகர்பாபு இழந்து விட்டார். இன்னும் ஒரு வார காலத்தில், வரும் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள், தனது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து சேகர்பாபு பதவி விலக வேண்டும்.

இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களுடன் துணை போகிறவருக்கு, இந்து சமய அறநிலையத் துறையில் என்ன வேலை? வரும் செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள், சேகர்பாபு அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகவில்லை என்றால், செப்டம்பர் 11ஆம் தேதி, சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகம் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் உள்ள அலுவலகங்கள் முற்றுகையிடப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழக பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பாஜகவினர் பலர் நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கரு.நாகராஜன், “வரும் 11ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம்

இதேபோல தமிழகம் முழுவதும் 60 மாவட்டங்களில் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாகவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இந்து தர்மத்தை ஒழிப்போம் என்ற மாநாட்டில் கலந்துகொண்டது சட்ட விதிமீறல். எனவே 164(3) சட்ட விதிபடி அவர் எடுத்த உறுதிமொழிக்கு எதிரான செயல் என்பதால் அமைச்சர் சேகர்பாபு உடனே பதவி விலக வேண்டும்.

சனாதன ஒழிப்பு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கு உலகம் முழுவதிலும் இருந்து கண்ட குரல்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஆளுநரிடம் புகார் அளித்துள்ளோம். இந்து மக்களுக்கு எதிராக தான் திமுக ஆட்சி தோற்றுவிக்கப்பட்டது என வெளிப்படையாக கூறி வருகின்ற தேர்தலில் ஓட்டு கேளுங்கள்.

திமுகவின் தர்மம் சுயநலம், குடும்ப வளர்ச்சி. சனாதன தர்மம் என்பது எங்களுடைய தர்மம். சனாதன தர்மம் குறித்து திமுகவினர் அவதூறாக பேசியதால் இந்து மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். அதனை ஒரு விரல் புரட்சியில் காண்பிப்பார்கள். 36 ஆயிரம் கோயில்களில் அர்ச்சகராக உள்ள அனைவரும் பிராமணர்கள் கிடையாது.

வேறு எந்த சமுதாயம் பற்றி குறை கண்டுபிடிக்க திமுகவினருக்கு சக்தி உள்ளதா? சனாதன ஒழிப்பு தொடர்பாக முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மேலும் போராட்டம் வெடிக்கும்” எனக் கூறியுள்ளார்.

  • Varun Dhawan Keerthy Suresh viral video அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!
  • Views: - 432

    0

    0