டெல்லியில் சொல்லி அடிக்குதா பாஜக? ஆரம்பம் முதலே அட்டகாசம்.. தேர்தல் முடிவுகள்!

Author: Udayachandran RadhaKrishnan
8 February 2025, 8:31 am

டெல்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடந்தது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என்ற மும்முனை போட்டி நடந்தது.

தேர்தல் முடிந்ததும் வெளியான கருத்துக்கணிப்பில் பெரும்பாலும், பாஜகவே வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. 27 வருடங்களுக்கு பிறகு பாஜக ஆட்சியை கைப்பற்றும் என கூறப்படுகிறது.

ஆனால் 3வது முறையாக ஆம் ஆத்மியே ஆட்சியை பிடிக்கும் என அக்கட்சியின் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இன்று தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

ஆரம்பம் முதலே பாஜக முன்னிலை பெற்று வருகிறது. 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலில் 36 இடங்கள் பெற்றால் ஆட்சியை கைப்பற்றிவிடலாம்.

Delhi Bjp

தற்போது பாஜக 17 இடங்களிலும், ஆம் ஆத்மி 11 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. டெல்லியில் மட்டும் 27 வருடங்களாக ஆட்சியை பிடிக்காத பாஜக இம்முறை ஆட்சியை பிடித்து வரலாற்று சாதனையை படைக்க உள்ளதாக கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்…

  • sincere thanks to ajith kumar sir shared by arjun das என் மேல நம்பிக்கை வச்சதுக்கு மிக்க நன்றி அஜித் சார்- அர்ஜுன் தாஸ் உருக்கம்