பாஜக நிர்வாகி சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல் நடந்த சம்பவம் ; 3 திமுக கவுன்சிலர்கள் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு

Author: Babu Lakshmanan
23 December 2022, 11:11 am

தூத்துக்குடி : பாஜக மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீடு மற்றும் கார் மீது தாக்குதல் : திமுக 3 மாமன்ற உறுப்பினர்கள் உட்பட 13 பேர் மீது சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா தூத்துக்குடி தபால் தந்தி காலனி 8வது தெருவில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் காலை 11 மணியளவில் நாகர்கோவிலில் நடைபெறும் கூட்டத்திற்கு கலந்து கொள்ள சென்றனர்.

இந்த சூழலில், வீட்டில் யாரும் இல்லாதததை டுவிபுரம் மாநகராட்சி 30வது வார்டு திமுக பெண் மாமன்ற உறுப்பினர் அதிர்ஷ்டமணி மற்றும் அவரது கணவர் ரவீந்திரன் லெவஞ்சிபுரத்தைச் சார்ந்த 45வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், மற்றொரு 30வது வார்டு மாமன்ற உறுப்பினர் இசக்கி ராஜா உள்ளிட்ட 9 பெண்கள் 2 ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்து பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பாவின் வீட்டை தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

மேலும், காரின் கண்ணாடியை உடைத்ததாகவும், மேற்படி பொருட்களின் சேத மதிப்பு சுமார் 2.50 லட்சம் இருக்கும் என தூத்துக்குடி மேல சண்முகம் 5வது தெருவை சார்ந்த பாஜக பிரச்சார பிரிவு தெற்கு மாவட்ட செயலாளர் ரத்தினராஜ் என்ற கனி என்பவர் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் இவர்கள் 13 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் இவர்களை தேடி வருகின்றனர்.

  • actress Abort his Fetus After Famous Actor Warned வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!