திமுகவுக்கு சனிப்பெயர்ச்சி துவங்கியாச்சு.. தமிழகத்திற்கு பிடித்துள்ள பீடை தான் இந்த ஊழல் அரசு ; எச்.ராஜா காட்டம்

Author: Babu Lakshmanan
21 December 2023, 6:51 pm

நேற்றிலிருந்து திமுகவிற்கு சனிப்பெயர்ச்சி துவங்கிவிட்டதாக பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- அமைச்சர் பொன்முடி தண்டிக்கப்பட்டிருக்கிறார். திமுகவிற்கு தண்டனை என்ற முதல் விக்கெட் சரிந்துள்ளது.
நேற்றிலிருந்து திமுகவிற்கு சனிப்பெயர்ச்சி துவங்கிவிட்டது. பொன்முடிக்கு எதிரான வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தால் ஜாமீன் கிடைத்திருக்காது. அவர் நேரடியாக சிறை சென்று இருப்பார்.

ஸ்டாலின் தலைமையிலான அரசு ஒட்டுமொத்தமாக ஊழல் அரசு. அது தமிழகத்திற்கு பிடித்துள்ள பீடை, இதனை அகற்றுவது தான் தமிழக மக்களுக்கு விடிவு காலம். திமுக அமைச்சர்கள், எம்பிக்களின் ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்தால், தமிழகத்தின் 8 லட்சம் கோடி கடனை அடைத்து விடலாம்.

சத்தீஸ்கர் மாநில தேர்தலில் பாஜக வெற்றிக்கு சனாதனம் பற்றி, உதயநிதி ஸ்டாலினின் பேச்சும் ஒரு காரணம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மரண அடி வாங்குவதற்கு உதயநிதி காரணமாக அமைவார்.

நிதீஷ்குமாரிடம் இந்தி தெரியாததால் ஸ்டாலின் மரண அடி வாங்கியுள்ளார். நீதிமன்றத்தில்அமைச்சர் பொன்முடி ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டிருப்பது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியான விஷயம். அகம்பாவ திமுக அரசாங்கம் விரைவில் அழியும், என்று தெரிவித்தார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!