புரிதல் இல்லாதவர் உதயநிதி ஸ்டாலின்… சின்னபிள்ளை தனமாக பேசி வருகிறார் ; பாஜக பிரமுகர் விமர்சனம்…!!!

Author: Babu Lakshmanan
13 December 2023, 6:28 pm

உதயநிதி ஸ்டாலின் புரிதல் இல்லாமல் பேசுவது, சிறுபிள்ளை பேசுவது போல் உள்ளதாக பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கதலி நரசிங்க பெருமாள் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கதலி நரசிங்க பெருமாள் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- ஊழலற்ற நாட்டின் வளர்ச்சி தருகின்ற நிர்வாகத்தினை பாரதப் பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளாக தந்து கொண்டிருக்கிறார். பத்தாண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியா இடம் பிடித்திருந்தது.

தற்போது உலக நாடுகள் இந்திய நாட்டை நிமிர்ந்து பார்க்கும் அளவிற்கு வளர்ந்து வருகிறது. அதற்கு காரணம் மோடி தான். விபி சிங் காலத்தில் கூட பல்வேறு ஊழல்கள் அரங்கேறியுள்ளன. தற்போது பொருளாதாரத்தில் இந்தியா ஐந்தாம் இடத்தை எட்டி உள்ளது. தனிமனித வருமானமும் அதிகரித்துள்ளது. மோடியின் நேர்மையான ஆட்சிக்கு கடந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் தான் சாட்சியாக உள்ளது.

காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி ஆக இருந்த வீரா பிரசாத் சாகு சம்பந்தப்பட்ட 30 இடங்களில் 40 குழு கொண்ட அமலாக்கத்துறை சோதனை செய்திகள் ரொக்கம் மட்டும் 300 கோடிக்கும் மேல் கைப்பற்றி உள்ளனர். அவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவரும் கூட. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல மூன்று முறை ராஜ்யசபா எம்பி ஆக இருந்த ஒருவரிடம் மட்டுமே 300 கோடிக்கு மேல் அமலாக்கத் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

அவரைப் பற்றி சோனியா காந்தி, ராகுல் காந்தி என யாரும் வாய் திறக்கவில்லை. அவர்கள் அமைத்த கூட்டணிக்கு தலைவர் கிடையாது. குடும்ப அரசியலில் உள்ளவர்கள், ஊழல்வாதிகள் என ஒன்றிணைந்து கூட்டணி வைத்துள்ளனர். இருப்பினும், சட்டமன்றத் தேர்தலில் பாஜக தான் 4 மாநிலங்களில் மூன்று மாநிலங்களில் கைப்பற்றி சாதித்துக் காட்டியுள்ளது உள்ளது. தேர்தல் கருத்து கணிப்புகள் எல்லாம் தாண்டி வெற்றி பெற்றுள்ளது.

நேர்மையான அதிகாரிகளை பாஜக உருவாக்கி வருகின்றது. கடந்த 50 ஆண்டுகளாக அரசாங்கம், அதிகாரிகளும் ஊழல்வாதிகளாகவே இருந்துள்ளனர், என்றார்.

சமீபத்தில் ஊழல் செய்ததாக அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கைது செய்தது பற்றி குறித்து பேசுகையில், “தவறு செய்பவர் யாராக இருந்தாலும் அதை பாஜக அரசு தண்டிக்கும். உதயநிதி ஸ்டாலினுக்கு புரிதல் இல்லை. படத்தில் ஹீரோவாக நடித்து, ஒரு குடும்பத்தில் பிறந்ததால் ஒரு உயர்மட்ட பொறுப்புக்கு வந்துள்ளார். மற்றபடி அமைப்பு, நிர்வாகம் ஆகியவற்றில் புரிதல் இல்லாமல் சின்ன பிள்ளை போன்று பேசி வருகிறார், என பேட்டி அளித்தார்

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 355

    0

    0