தமிழக அரசு அறிவித்த ரூ.6000 எப்படி வந்துச்சு தெரியுமா…? திமுக அரசு எந்த உதவியும் செய்யல ; வேலூர் இப்ராஹிம் பரபர குற்றச்சாட்டு!!

Author: Babu Lakshmanan
12 December 2023, 5:01 pm

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் நிதியைத் தான் தமிழக அரசு வழங்குவதாக பா.ஜ.க சிறுபான்மையினர் பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் திமுகவின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், வேலூர் மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும்,வேலூர் பாலாற்றில் குப்பை கொட்டுவதை கண்டித்தும், வேலூர் மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறுபான்மையினர் பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் பங்கேற்று, தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டையும் வேலூர் மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டையும் கண்டித்தும் கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் பங்கேற்று வேலூர் மாநகராட்சியின் சீர்கேட்டை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

பின்ன செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம் கூறியதாவது :- வரும் 20 நாட்களுக்குள் வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்பட வேண்டும். சாலைகள் உடனடியாக செப்பனிட வேண்டும். கழிவு நீர்களை உடனடியாக அகற்ற வேண்டும். சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். வேலூர் மாநகராட்சியில் மக்களின் பிரச்சினைகள் தொடரும் பட்சத்தில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும்.

தமிழகத்தில் மக்களுக்கான திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படவில்லை, அண்மையில் மிக்ஜாம் புயலால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு இதுவரை ரூபாய் 900 கோடிக்கு மேல் நிவாரண நிதியாக வழியுள்ளது. ஆனால் திமுக அரசு நிவாரண நிதியை குறைவாக வழங்கி உள்ளதாக தெரிவித்துள்ளது
இது கண்டிக்கத்தக்கது.

இதுவரை தமிழக அரசு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த உதவியும் செய்யப்படவில்லை. மத்திய அரசுதான் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வந்து பார்வையிட்டார். இன்று பல்வேறு இடங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர் ஆனால் தமிழக அரசு இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்காக எதையும் செய்யவில்லை.

மத்திய அரசு வழங்கி உள்ள நிதியை வைத்து தான் தற்போது 6000 ரூபாய் வழங்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த நிதி போதாது என்றும் ரூபாய் 10,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாக வேலூர் இப்ராஹிம் கூறினார்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 893

    0

    0