பிரதமருக்கே பாதுகாப்பு கொடுக்க முடியலைனா ஆட்சி கலைச்சிட்டு போங்க ; திமுக அரசு மீது வேலூர் இப்ராஹிம் காட்டம்!!!!

Author: Babu Lakshmanan
16 March 2024, 8:29 am

பிரதமருக்கு பாதுகாப்பு வழங்க முடியாவிட்டால் தமிழகத்தில் ஆட்சியை கலைத்து விட்டு செல்லுங்கள் என பாஜக தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராகிம் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் போதை ஒழிப்பு ஆர்பாட்டம் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் பாஜக மாநில செயலாளர் ஆனந்த பிரியா, தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராகிம் ஆகியோர் கலந்து கொண்டு, திமுக அரசுக்கு எதிராக கண்ட கோசங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், வேலூர் இப்ராஹிம் பேசுகையில், “பாரதப் பிரதமருக்கு கடுமையான அச்சுறுத்தல் உள்ளது. அதனால், பாதுகாப்பு வழங்க முடியாது என கூறுகிறது காவல்துறை. பிரதமருக்கே பாதுகாப்பு வழங்க முடியாவிட்டால் தமிழகத்தில் ஆட்சியை கலைத்து விட்டு செல்லுங்கள்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீரழிந்துள்ளது. திமுகவை கண்டித்து பேசினால் காவல் துறையினர் பொய் வழக்கு போடுகின்றனர்.

திமுக ஆட்சி என்றால் காவல்துறை கைகள் கட்டப்பட்டு, உளவுத்துறை உறங்கி கொண்டிருக்கின்றது. தமிழகத்தில் ஆபத்தான சூழல் இருக்கிறது. திமுக ஆட்சியை தமிழகத்தை விட்டு துரத்தி அடிக்க வேண்டியது நமது கடமை என அவர் தெரிவித்தார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?