தஞ்சை தேர் விபத்துக்கு முழுக்க முழுக்க அரசு அதிகாரிகள்தான் காரணம் : பாஜக துணைத் தலைவர் முருகானந்தம் பரபரப்பு குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 April 2022, 10:46 pm

தஞ்சாவூர் : தேர் விபத்திற்கு அரசு அதிகாரிகள் தான் காரணம் என்று பாஜக மாநில துணை தலைவர் முருகானந்தம் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

தஞ்சையை அடுத்த களிமேட்டில் நடைபெற்ற தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாரதிய ஜனதா கட்சி மாநில துணை தலைவர் முருகானந்தம் மாவட்ட தலைவர் இளங்கோ, மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்சதிஷ் உள்ளிட்டோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை வீடு வீடாக நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.பின்னர் தேர் மின்சாரம் தாக்கி எரிந்த இடத்தையும் பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய முருகானந்தம், இந்த விபத்திற்கு அரசு அதிகாரிகள் தான் காரணம் அப்பகுதியில் சாலை உயர்த்தப்பட்டு அகலப் படுத்தப்பட்டுள்ளது என்றும் திருவிழாக்கள் நடைபெறும் போது மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டும் இதில் அரசு அதிகாரிகள் கவனக்குறைவாக இருந்துள்ளனர்.

இதற்கு அரசாங்கமும் காரணம் என்ற அடிப்படையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணங்கள் அதிகப்படுத்த வேண்டும். அந்த குடும்பத்தில் படித்தவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், மாணவர்களின் கல்வி செலவு மேல் படிப்பிற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதில் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…