திராவிட நாடு எனச் சொன்னவர்கள் இப்ப தமிழ்நாடு எனப் பேசுறாங்க : தமிழகம் சர்ச்சையில் பாஜக விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
7 January 2023, 7:16 pm

அடைந்தால் திராவிட நாடு இல்லையென்றால் சுடுகாடு என கூறியவர்கள் எல்லாம், தமிழ்நாட்டைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதாக பாஜக மாநில செயலாளர் வினோஜ் P செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி குமாரநாயக்கன் பேட்டை வெக்காளியம்மன் கோவிலில், பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில செயலாளர் வினோஜ் P செல்வம் கலந்து கொண்டு, ஒரே இடத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் பொங்கல் வைக்கும் நிகழ்வை துவக்கி வைத்தார்.

பொங்கல் விழாவில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம், பரதநாட்டியம், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நிகழ்த்தி மாணவர்கள் அசத்தினர். பாமக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியை சார்ந்த பலர் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

பின்னர் பாஜக மாநில செயலாளர் வினோஜ் P செல்வம் பேசுகையில், “அடைந்தால் திராவிட நாடு இல்லையென்றால் சுடுகாடு என கூறியவர்கள் எல்லாம், தமிழ்நாட்டைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகம் தமிழ்நாடு எல்லாம் ஒன்றுதான். பாரம்பரியம் பண்பாட்டை காக்கின்ற கட்சியாக பாஜக விளங்குகிறது,” என தெரிவித்தார்.

இதில் பாஜக முன்னாள் மாவட்டத் துணைத் தலைவர் முத்துராஜ், அரசு தொடர்பு துறை மாநில தலைவர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ