தமிழகத்தில் கருத்துக்கணிப்பை விட அதிக எண்ணிக்கை பாஜகவுக்கு கிடைக்கும் : தமிழிசை நம்பிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
2 June 2024, 2:17 pm
tamilisa
Quick Share

வேலூர்மாவட்டம், குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் சித்த மருத்துவமனையில் தெலுங்கானாவின் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தை குமரி ஆனந்தன் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

இன்று பிறந்தநாள் காணும் தமிழிசை சவுந்தரராஜன், தந்தையை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் வாங்க முடிவு செய்தார். இதனால் தந்தையை பார்ப்பதற்காக தமிழிசை சவுந்தரராஜன் ரெயில் மூலம் காட்பாடிக்கு வந்தார். காட்பாடி ரெயில் நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-என்னுடைய பிறந்தநாளும் ஜுன் 2 தான், தெலுங்கானாவும் பிறந்தது ஜூன் 2 தான். மீண்டும் மோடி பிரதமராக நன்றியுடன் வாக்களித்த மக்களுக்கு நன்றி. தமிழகத்திலும் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி, வாக்கு சதவிகிதமும் அதிகரிக்கும். வேங்கை வயல் பிரச்சினைக்கு தீர்வில்லை.

என்னுடைய பிறந்தநாளும் ஜுன் 2 தான், தெலுங்கானாவும் பிறந்தது ஜூன் 2 தான். மீண்டும் மோடி பிரதமராக நன்றியுடன் வாக்களித்த மக்களுக்கு நன்றி. தமிழகத்திலும் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி, வாக்கு சதவிகிதமும் அதிகரிக்கும்.

வேங்கை வயல் பிரச்சினைக்கு தீர்வில்லை.காங்கிரசின் மாவட்டத்தலைவர் கொலைக்கு தடயமும், தீர்வும் கிடைக்கவில்லை. இவ்வளவு தோல்விகளை வைத்துகொண்டும் ரேஷன் அரிசி கடத்தல், மின் கட்டணம் பால், பத்திரபதிவு கட்டணம் உயர்வு. இலாகா இல்லாத ஒரு அமைச்சர் ஊழலால் சிறையில் உள்ளார். மக்கள் இதனால் வெறுப்படைந்துள்ளனர். வருங்காலத்தில் இதனை உணர வேண்டும்.

பாரத தேச மக்கள் வளர்ச்சிக்காகவும், ஊழலுக்கும் எதிராக வாக்களித்துள்ளனர். நாங்கள் நாட்டின் பாதுகாப்பிற்காக வாக்களிக்கிறோம் என மக்கள் மகிழ்ச்சியாக சொல்கின்றனர்.

மக்கள் நாட்டின் பாதுகாப்பை உணர்ந்தே பா.ஜ.க.வுக்கு வாக்களி த்துள்ளனர். பிரதமர் மீது, மக்கள் அபரிவிதமான அன்பை வைத்திருகின்றனர். தமிழகத்தில் இன்னும் அதிகமான எண்ணிக்கையை எதிர்பார்த்தோம். தி.மு.க. கூட்டணி பலமாக உள்ளது. ஆனால் எதிர் வாக்கு சிதறுகிறது. இருந்தாலும் தமிழக கருத்து கணிப்பை விட அதிக எண்ணிக்கையை பெறுவோம். திராவிட மாயையுடன் தவறுகள் நடக்கிறது. இதனை மக்கள் புரிந்துகொள்வார்கள். கன்னியாகுமரிக்கு மோடி தியானம் செய்ய வந்தார்.

ஆனால் ஸ்டாலின் கொடைக்கானால் கோள்ப் விளையாடினார். இதையெல்லாம் கேமரா இல்லாமலே படம் எடுத்தனர். மோடி எங்கு சென்றாலும் தியானம் செய்யலாம் என கூறினார்.

Views: - 204

0

0