திமுக என்ற நரகாசுரனை பாஜக விரைவில் வதம் செய்யும்.. எல்.முருகன் பேச்சுக்கு எதிர்ப்பு : மூத்த தலைவர் குரல்!!!

Author: Udayachandran RadhaKrishnan
14 November 2023, 5:02 pm

திமுக என்ற நரகாசுரனை பாஜக விரைவில் வதம் செய்யும்.. எல்.முருகன் பேச்சுக்கு எதிர்ப்பு : மூத்த தலைவர் குரல்!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தீபாவளி வாழ்த்து சொல்லவில்லையே ஏன்? என்று பாஜக தலைவர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி விமர்சித்து வருகிறார்கள்..

இந்நிலையில், “திமுக என்ற நரகாசுரனை பாஜக விரைவில் வதம் செய்யும்” என்று எல்.முருகன் சாடியிருந்ததற்கு, திராவிடர் கழக மூத்த தலைவர் சுப வீரபாண்டியன் விளக்கம் ஒன்றை தந்துள்ளார்.. இதுகுறித்து ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில்,”திமுகவை வெற்றி பெறுவோம் என்று எல்.முருகன் சொல்வில்லை, மாறாக திமுகவை வதம் செய்வோம் என்றுதான் சொல்லி உள்ளார்.. வதம் செய்து கொண்டாடுவது தான் உங்களுக்கெல்லாம் தெரியுமா? என்றைக்கும் நல்லதை கொண்டாடவே மாட்டீர்களா?

அடுத்தவன் சாவை கொண்டாடுவதுதான் தீபாவளி.. யாராக இருந்தாலும், ஒருவர் இறந்து போனால் அது கொண்டாடுவதற்கான விஷயம் கிடையாது.. தீபாவளி என்பது தேவர் – அசுரர் யுத்தத்தின் விளைவாகும்.. அரசாங்கம் என்றால், அது தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் பொதுவானதுதான். அப்படியிருக்கும் போது, ஒருவர் இறந்ததை எப்படி வாழ்த்த முடியும்?

பெரியார் பிறந்தநாளுக்கு பாஜக வாழ்த்து சொல்லுமா? அவர்களின் ஆதிக்கத்தை எதிர்த்த ஒருவருக்கே அவர்கள் வாழ்த்து சொல்ல மாட்டார்கள். போரில் ஒருவர் கொல்லப்பட்டார் என்பது ஒருவகை கதை. ஆனால் அதில், அறிவியல் எவ்வளவு இருக்கிறது என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும் இந்த அரசு என்ன செய்திருக்கிறது? பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட, மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே கொடுத்துள்ளது.. சிறப்பு பஸ்களை இயக்கியுள்ளது.. மற்றபடி, மக்கள் விருப்பத்திற்கு அரசு குறுக்கே நிற்கவில்லையே.

துணிக்கடை, பட்டாசுக் கடை எல்லாவற்றையும் விட கறிக்கடையில் தான் கூட்டம் அதிகம் இருந்தது என்பதுதான் நேற்றைய முக்கியச் செய்தி. கறிக்கடையில் கூட்டம் அலைமோதுவதை அவர்கள் ஏற்கிறார்களா? சரி… இவ்வளவு சொல்கிறார்களே.. சங்கரமடம் என்னைக்காவது தீபாவளிக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறதா? அதை ஏன் என்று பாஜகவினர் கேட்பார்களா? இவ்வாறு சுப. வீரபாண்டியன் கேள்வியெழுப்பினார்.

  • national award missed for paradesi movie because of bala video தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?