குளிப்பதை வீடியோ எடுத்த முன்னாள் ராணுவ வீரர்.. பாஜக பிரமுகர் சிக்கியது எப்படி?
Author: Hariharasudhan30 January 2025, 2:23 pm
தென்காசியில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வசித்து வருபவர் குமார். இவரது பக்கத்து வீட்டில் இளம்பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில், இவர், தனது பக்கத்து வீட்டுப் பெண் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்ததை செல்போனில் படம் எடுத்துள்ளார்.

இதனைக் கண்ட அந்தப் பெண், அதிர்ச்சியில் கூச்சலிட்டு உள்ளார். இதனையடுத்து, குமார் அங்கிருந்து ஓடியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: காதலியோடு பைக்கில் சென்ற நபர்.. ரத்தக்காயங்களோடு போராட்டம் : கோவையில் கொடூரம்!
இந்த விசாரணையில், அவர் முன்னாள் ராணுவ வீரர் என்பதும், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் பட்டியல் அணியின் மாவட்டத் தலைவர் என்பதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அவரை தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் சிறையில் அடைத்தனர்.