பல முறை உல்லாசம்.. வீடியோ எடுத்து மிரட்டி ₹50 லட்சம் பறிப்பு : பாஜக பிரமுகரின் கோர முகம்!

Author: Udayachandran RadhaKrishnan
10 February 2025, 1:44 pm

பல பெண்களுடன் பல முறை உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்து மிரட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்

சென்னை தாம்பரம் திருவிக நகரை சேர்ந்தவர் லியாஸ் தமிழரசன். செங்கல்பட்டு பாஜக வடக்கு மாவட்ட இளைரணி செயலாளராக உள்ளார்.

இதையும் படியுங்க: பிரபாகரனே பெரியாரை ஏற்றுக்கொண்டாலும் நானும் என் தம்பிகளும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் : சீமான்!

இவர் மீது தற்போது ஏராளமான புகார்கள் வந்துள்ளன. பெண்களை காதலிப்பது போல ஏமாற்றி உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்து மிரட்டில் பல லட்சம் சுருட்டியுள்ளதாக வந்த புகாரை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Video Extortion Bjp Youth Wing Secretary Arrest

போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. கடந்த 2018ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார் லியாஸ் தமிழரசன்-

2022ஆம் ஆண்டு அந்த பெண்ணை தனது வீட்டிற்கு வரவழைத்து வற்புறுத்தி உல்லாசமாக இருந்த தமிழரசன் அதை வீடியோவாக எடுத்துள்ளார்.

பல இடங்களுக்கு அந்த பெண்ணை அழைத்து சென்று பல முறை உல்லாச வாழ்க்கையை அனுபவித்துள்ளான். ஒரு நாள் அந்த பெண் தன்னைத திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் திருமணம் செய்ய ஏற்க மறுத்த லியாஸ் தமிழரசன், உல்லாசமாக என்னுடன் இருந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

அதே போல பல பெண்களுடன் காதல் என்னும் போர்வையால் ஏமாற்றி உல்லாசமாக இருந்து பணம் பறித்துள்ளார். சுமார் ₹50 லட்சம் வரை பணம் பறித்த லியாஸ் தமிழரசன், அந்த பணத்தை வைத்து தனது சகோதரிக்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்துள்ளார்.

Liyas Tamizharasan

மேலும் சொகுசு கார் ஒன்றை வாங்கி ராஜா போல வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே லியாஸ் தமிழரசன் குறித்து பெண்கள் புகார் கூறியதையடுத்து தற்போது சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.

  • விஜயை பொழந்து கட்டிய கும்பல்…இது எப்போ நடந்துச்சு..அவரே சொன்ன சுவாரசிய தகவல்.!
  • Leave a Reply