மதுரை : விவசாயியை தாக்கிய சிறைக்காவலர் மற்றும் இந்திய ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் பாண்டி (வயது 38). விவசாயியான இவர் சம்பவத்தன்று இரவு திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக குடும்பத்துடன் ஆட்டோவில் வந்தார். அப்போது காளவாசல் திருமண மண்டப வாயிலில் பாண்டி குடும்பத்தினர் ஆட்டோவில் இருந்து கீழே இறங்கினர்.
அப்போது ஆட்டோவின் பின்புறம் வந்த மோட்டார் சைக்கிளில் 2 பேர் இருந்தனர். அவர்கள் பலத்த சத்தத்துடன் ‘ஹாரன்’ அடித்தவாறு இருந்ததை அடுத்து பாண்டி ‘சிறிது நேரம் பொறுங்கள். நாங்கள் ஆட்டோவில் இருந்து இறங்கி கொள்கிறோம்’ என்று தெரிவித்து உள்ளார்.
இதனிடையே 2 தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் ஆத்திரம் அடைந்த நிலையில் பாண்டியை சரமாரியாக தாக்கினர். இதுதொடர்பாக எஸ்.எஸ்.காலனி காவல் ஆய்வாளர் பூமிநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அப்போது பாண்டியை தாக்கியது திருப்பரங்குன்றம், தேவி நகரை சேர்ந்த பார்த்தசாரதி (வயது 25) மற்றும் ஹார்விபட்டி பாலாஜி (வயது 25) என்பது தெரியவந்தது. இவர்களில் பார்த்தசாரதி மதுரை மத்திய ஜெயிலில் சிறைக்காவலராக வேலை பார்த்து வருகிறார். பாலாஜி ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து எஸ்.எஸ்.காலனி போலீசார் பாண்டியை தாக்கியதாக பார்த்தசாரதி, பாலாஜி ஆகிய 2 பேரிடமும் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது : இன்று நடைபெற்ற மருதமலை…
வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த கூலி தொழிலாளி ஜாகீர் (50) என்பவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 10…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.