அடக்கடவுளே.. அரணாக இருக்க வேண்டிய உறவினரே பார்வையற்ற சிறுமியை அரவணைத்த கொடுமை : பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம்!!
Author: Udayachandran RadhaKrishnan17 August 2022, 11:11 am
செங்குன்றம் அருகே 4ம் வகுப்பு பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட உறவினர் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள கும்மனூர் கிராமத்தில் பார்வையற்ற நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி நேற்று மாலை வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அவரது சித்தி மாணவியை தேடினார்.
அப்போது சிறுமியின் வீட்டு அருகே வசித்து வரும் உறவினர் லிப்பா @ ராஜா (வயது 34) என்பவரின் வீட்டிலிருந்து சத்தம் போட்ட படி சிறுமி தப்பி ஓடி வந்தார். இது குறித்து சிறுமியிடம் கேட்ட போது தகாத முறையில் நடக்க முயற்சி செய்ததாக கூறியதின் பேரில் மாணவியின் சித்தி செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து சோழவரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு புகாரின்பேரில் மாணவிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட உறவினரை போலீசார் கைது செய்து அம்பத்தூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க மேற்கொண்டுள்ளனர்.