சிவசேனா சின்னத்தை முடக்கியது பாஜகவின் சதி… தமிழகத்தில் அப்படி நடக்கலாம்.. அது மோடி கையில்தான் உள்ளது : காங்., எம்பி திருநாவுக்கரசர்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 October 2022, 8:44 pm

மகாராஷ்டிராவில் சிவசேனா சின்னம் முடக்கப்பட்டது பிஜேபியின் சதியாக இருக்கலாம், தமிழகத்திலும் இது போன்று மத்திய அரசு நினைத்தால் சின்னம் முடக்கப்படலாம் என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் எம் எம் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மத்திய அரசு நிதியின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது. எந்த அளவுக்கு அந்த பணிகள் முடிவு பெற்றுள்ளது மீதமுள்ள பணிகளில் விரைவாக செய்வது எப்படி என்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு பிரதமர் வருவது என்பது அவருடைய முடிவு யார் வேண்டுமானாலும் தேவர் நினைவிடத்திற்கு வரலாம்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் எந்த அணியையும் சாராமல் நடுநிலைமையாகத்தான் உள்ளனர். பிரச்சாரத்திற்கு வரும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கொடுப்பது என்பது அந்தந்த நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் அவர்களுடைய முடிவை பொருத்தது.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக நிர்வாகிகள் செயல்படும்போது அவர்கள் வகிக்கக்கூடிய கட்சிப் பதவியை ராஜினாமா செய்து விட்டுதான் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று தேர்தல் அதிகாரி உத்தரவிட்டதால் தான் சசி கரூர் பிரச்சாரத்திற்கு யாரும் செல்லவில்லை.

இரண்டாவது முறையாக திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக முதல்வருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போன்று பொதுச் செயலாளர், தலைமை நிலைய செயலாளர் மற்றும் கனிமொழிக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்சித் தலைவராக அவர் பொதுக்குழுவில் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு ஒரு சில ஆதங்கத்தையும் வெளிப்படுத்துகிறார்
அதற்கு அவருக்கு முழு உரிமை உள்ளது. அதை ஊடகங்கள் தான் பெரிதாக்கிவிட்டன.

மத்திய அரசு இந்தியை மீண்டும் திணிக்க முயற்சி செய்வது கண்டனத்துக்குரியது
இந்தி திணிப்பு தமிழகத்தில் ஒரு நாளும் வெற்றி பெறாது. அவ்வாறு அது முயற்சி செய்தால் மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டம் வெடிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும்

மகாராஷ்டிராவில் சிவசேனா சின்னம் முடக்கப்பட்டது பிஜேபியின் சதியாக இருக்கலாம். தமிழகத்திலும் இது போன்று மோடி மற்றும் அமித்ஷா நினைத்தால் சின்னம் முடக்கப்படலாம்.

சட்டசபையில் அதிமுக இருக்கை ஒதுக்குவது தொடர்பாக சபாநாயகர் என்ன முடிவு எடுக்க உள்ளார் என்பதை அறிய நானும் ஆவலாக உள்ளேன். திமுக எம்பி ஆ ராசா மீது சிபிஐ சொத்து குவிப்பு வழக்கில் குற்ற பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது அதை கண்டிப்பாக ராஜா எதிர் கொள்வார். இவ்வாறு அவர் கூறினார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?