விஜய் ரசிகர்களை சொறண்டி பார்த்த புளுசட்டை மாறன் : இப்பவே இப்படியா..?

Author: Rajesh
8 April 2022, 4:51 pm

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் பீஸ்ட், திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இன்று படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியாக இருக்கிறது. படத்துக்கான டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதற்கிடையே, சமீபத்தில் பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று யூட்யூபிலும் சாதனை படைத்தது.

இதனிடையே ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் அவர்களின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய் சென்றிருந்தார். விஜய் மணமக்களை வாழ்த்திவிட்டு வெளியே வர அந்த நேரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் வர இருவரும் சந்தித்து பேசிக்கொண்டனர். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரல் ஆனது.

இப்படி ஒரு சந்திப்பு திடீரென சந்திப்பா.? அல்லது முன்கூட்டியே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததா.? என்ற கேள்விகளையும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் விஜய்யை விமர்சிக்கும் வகையில் சினிமா விமர்சகர் மற்றும் இயக்குனரான ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து இருக்கிறார்.

தலைவா, மாஸ்டர், பீஸ்ட் என தனது பட ரிலீஸ் சமயத்தில் மட்டும் 100சதவீத அனுமதி, டிக்கட் உயர்வு, சிறப்புக்காட்சி அனுமதி கேட்டு தமிழக, புதுவை முதல்வரை சந்திக்கிறாரா விஜய்? இதேபோல ரிலீஸ் சமயம் அல்லாத நாட்களில் மக்கள் நலனுக்காக அடிக்கடி முதல்வர்களை சந்திப்பாரா? – தமிழக மக்கள் கேள்வி.

சமீபத்தில் புதுவை முதல்வரை விஜய் சந்தித்தது இதற்குத்தானா? – சினிமா ரசிகர்கள் கேள்வி.?

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!