“பிட்டுப்பட நடிகர்” என வாரிசு நடிகரை கேவல படுத்திய ப்ளூ சட்டை மாறன்.. சர்ச்சை பதிவு வைரல்..!

Author: Rajesh
19 April 2022, 7:39 pm

சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் யூட்யூபில் தனக்கென ஒரு சேனலை தொடங்கி திரைப்படங்களுக்கு விமர்சனம் செய்து வருகிறார். அதுவும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை பற்றி விமர்சனம் என்ற பெயரில் எதையாவது உளறுவதை வேலையாக வைத்திருப்பார். இதற்கு பல கண்டனங்களும் வருவதுண்டு. ஆனால் அவரோ அதைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து எதையாவது பேசி ஒரு சர்ச்சையை கிளப்பி வருகிறார்.

இந்த நிலையில் பிரபல நடிகர் சாந்தனுவை கடுமையான வார்த்தைகளை கூறி இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. தற்போது விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் பீஸ்ட் திரைப்படத்தை பற்றி பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதை நடிகர் ஆரி அர்ஜுனன் ஒரு மேடையில் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது ஒரு தியேட்டர் உரிமையாளர் பீஸ்ட் மற்றும் கே ஜி எஃப் படத்தின் வசூல் பற்றி பேசும் வீடியோவை பார்த்தேன்.

ஒரு படத்தை பற்றி உயர்வாகவும் மற்றொரு படத்தை பற்றி தாழ்வாகவும் அவர் பேசி இருந்தார். இது மிகவும் வருத்தமான விஷயம். ஒரு படத்தைப் பற்றி நீங்கள் செய்யும் தவறான விமர்சனம் ஒட்டுமொத்த படக்குழுவின் உழைப்பையும் மட்டம் தட்டுவதற்கு சமம் என்று ஆதங்கத்துடன் பேசியிருந்தார். ஆரியின் இந்தப் பேச்சுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் சாந்தனுவும் அவரின் பேச்சு தரமான செருப்படி என்று பாராட்டி இருந்தார். இதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் ப்ளூ சட்டை மாறன் சாந்தனுவை முருங்கைக்காய் சிப்ஸ் பிட்டு பட நடிகர் என்று குறிப்பிட்டிருந்தார்.
அவரின் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் ஒரு புயலை கிளப்பி இருக்கிறது. அவருக்கு பதிலடி தரும் விதமாக ரசிகர்கள் நீங்கள் எடுத்த ஆன்ட்டி இந்தியன் திரைப்படம் எந்த மாதிரியான படம் என்றும் முதலில் நீங்கள் பாகுபாடு பார்க்காமல் விமர்சனம் பண்ணுங்கள் என்றும் கூறிவருகின்றனர்.

மேலும் தன்னைப் பற்றி விமர்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு பதில் தரும் விதமாக இந்த மாதிரி சில்லரை வேலை எல்லாம் நடக்கும் என்று எனக்கு எப்பவோ தெரியும் என்று சாந்தனு டுவீட் செய்துள்ளார். இதற்கு ஆதரவாகவும் வலிமை படத்தைப் பற்றி பேசியபோது நீங்கள் என்ன செய்தீர்கள் என்று அவருக்கு எதிராகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • Surya Clash With Ajith அஜித்துக்கு எதிராக களமிறங்கும் சூர்யா.. ஒரு கை பார்க்க முடிவு!!
  • Views: - 1458

    5

    1