Control Roomக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் : அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்.. ரயில் நிலையத்தில் சிக்கிய எம்.பி.ஏ பட்டதாரி!!

Author: Udayachandran RadhaKrishnan
30 September 2022, 1:01 pm

மீஞ்சூரில் வெடிகுண்டு வெடிக்கும் என எம்.பி.ஏ பட்டதாரி இளைஞர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போனில் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அனுப்பம்பட்டு பகுதியை சேர்ந்த லோகேஷ் என்பவர் காவல் துறை கட்டுப்பாட்டு எண் 100க்கு போன் செய்து வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து அவரின் செல்போன் சிக்னல் அரியன்வாயல் பகுதியை காட்டியது. இதைத் தொடர்ந்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் மது போதையில் மயங்கி கிடந்தவரை மீஞ்சூர் போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

பின்னர் அவரை டிஜிபி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து வருவதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

எம்பிஏ பட்டதாரியான லோகேஷ் காய்கறி வியாபாரம் செய்து வந்த நிலையில் மது போதையில் செல்போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து தற்போது கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி