புகழ் பெற்ற கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் : தீவிர கண்காணிப்பில் திருப்பூர் போலீசார்… உடனே நடந்த ட்விஸ்ட்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 December 2022, 9:06 pm

திருப்பூர் கொண்டத்து காளியம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், வெடித்து சிதறும் வாய்ப்பு உள்ளதால் தனக்கு பயமாக உள்ளது என தமிழக காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கும், கேரள மாநில காவல் துறைக்கும் தனது அடையாளத்தை மறைத்து ஒரு நபர் தகவல் தெரிவித்தார்.

உடனடியாக கோவிலில் பக்தர்கள் வெளியேற்றப்பட்டு சோதனை செய்ததில் வெடிகுண்டு தகவல் வெறும் மிரட்டல் என தெரியவந்தது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த எண்ணை வைத்து விசாரித்ததில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் பெருமாநல்லூர் அடுத்த அப்பியாபாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்(47) என்பது தெரியவந்தது.

இவர்‌ மது போதையில் வேண்டுமென்றே இது போன்று வெடிகுண்டு புரளி கிளப்பியதும் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தி மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க பொய்யான தகவலை சொன்ன கார்த்திகேயனை பெருமாநல்லூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 746

    0

    0