திருப்பூர் கொண்டத்து காளியம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், வெடித்து சிதறும் வாய்ப்பு உள்ளதால் தனக்கு பயமாக உள்ளது என தமிழக காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கும், கேரள மாநில காவல் துறைக்கும் தனது அடையாளத்தை மறைத்து ஒரு நபர் தகவல் தெரிவித்தார்.
உடனடியாக கோவிலில் பக்தர்கள் வெளியேற்றப்பட்டு சோதனை செய்ததில் வெடிகுண்டு தகவல் வெறும் மிரட்டல் என தெரியவந்தது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த எண்ணை வைத்து விசாரித்ததில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் பெருமாநல்லூர் அடுத்த அப்பியாபாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்(47) என்பது தெரியவந்தது.
இவர் மது போதையில் வேண்டுமென்றே இது போன்று வெடிகுண்டு புரளி கிளப்பியதும் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தி மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க பொய்யான தகவலை சொன்ன கார்த்திகேயனை பெருமாநல்லூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.