பாஜக எம்எல்ஏவுக்கு சொந்தமான பிரபல பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. ஈரோட்டில் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan29 August 2024, 12:32 pm
ஈரோடு சேனாதிபதிபாளையத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதி அவர்களுக்கு சொந்தமான பிரபல தனியார் இன்டர்நேஷனல் பள்ளியானது (THE INDIAN PUBLIC SCHOOL) செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளிக்கு இன்று காலை 8 மணி அளவில் மர்ம நபர்கள் தொலைப்பேசி மூலம் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தின் சார்பில் விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளிக்கு வந்த மாணவ மானவியர்களை பள்ளிக்கு வெளியே நிற்கவைக்கப்பட்டு பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர்.
மேலும் ஒரு சில மாணவ மணாவியர்களை வாகனங்கள் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.
தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தின் மூலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டத்தை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பள்ளிமுழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையிலான போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் அழைப்பு தொலைபேசி எண் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ஈரோட்டில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..